”இந்த வீட்ல நான் மட்டும் தான் சம்பாதிக்கல”..!! அடிக்கடி சண்டை..!! மகளிடம் அத்துமீறிய தந்தை..!! மனைவி செய்த அதிர்ச்சி செயல்..!!
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகனவேல் (45). இவர் எம்சிஏ பட்டதாரி முடித்து படிப்புக்கு ஏற்ற தகுந்த வேலை கிடைக்காததால், டெய்லராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற ஊழியர். கடந்த 2014ஆம் ஆண்டு மோகனவேலுக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி (36) என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. இருவரும், வண்டலூர் பகுதியில் வாழ்ந்து வந்த நிலையில், இவர்களுக்கு 10 வயது பெண் குழந்தை உள்ளது.
தந்தையின் பென்ஷன் பணத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்த நிலையில், குடும்பச் செலவிற்கு பணம் பற்றாத காரணத்தால் அவ்வப்பொழுது கணவன் - மனைவி இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன்பு வண்டலூர் பகுதியில் இருந்து காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மடம் தெருவில் அருகே ஆனந்த ஜோதி பண்டிதர் தெரு வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், மனைவி புவனேஸ்வரி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மனைவியோ ஆசிரியர் பணி செய்து வருகிறார், தந்தையோ ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர். இப்படி இருவருமே சம்பளம் வாங்கும் நிலையில், மோகனவேல் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருவதால் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் மோகனவேலுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு மனநிலைக்கு மருந்து எடுத்துக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
மனநிலைக்கு பாதிக்கப்பட்ட மோகனவேல் நேற்று மாலை வழக்கம் போல் மனைவி புவனேஸ்வரி, பணியை முடித்து வீட்டுக்கு வந்து நிலையில் வீட்டிலிருந்த புவனேஸ்வரி மற்றும் மகளிடம் சண்டையிட்டுள்ளார். தந்தை மகளிடம் அத்துமீற முயன்றபோது தாய் அதனை தடுக்க முயற்சித்ததால், டைலர் பணி செய்ய வைத்திருந்த கத்திரிக்கோலால் மனைவியை சரமரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த பொழுது, உறவினருக்கும், காவல்துறைக்கும் மோகனவேல் தகவல் கொடுத்துள்ளார்.
மேலும், காவல்துறை சம்பவ இடத்திற்கு வரும் வரை மனைவியின் சடலம் அருகே காத்துக்கிடந்துள்ளார். பின்னர், சிவகாஞ்சி போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த புவனேஸ்வரியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கணவர் மோகன்வேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : ரிசர்வ் வங்கியில் புதிய மாற்றமா..? ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட சஞ்சய் மல்ஹோத்ரா பேட்டி..!!