For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சட்டவிரோத பரிமாற்றம்!. சீனாவுக்கு அனுப்பப்பட்ட ரூ.50,000 கோடி ஹவாலா!. இந்திய நிறுவனங்கள் மீது ED கடும் நடவடிக்கை!

₹50,000 crore sent to China via hawala: ED cracks down on Indian companies
05:55 AM Oct 09, 2024 IST | Kokila
சட்டவிரோத பரிமாற்றம்   சீனாவுக்கு அனுப்பப்பட்ட ரூ 50 000 கோடி ஹவாலா   இந்திய நிறுவனங்கள் மீது ed கடும் நடவடிக்கை
Advertisement

Hawala: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மூலம் சுமார் ரூ.50,000 கோடியை சீனாவுக்கு அனுப்பியதாக இந்திய இறக்குமதி நிறுவனங்கள் குறித்து அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

Advertisement

பல இந்திய நிறுவனங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மரச்சாமான்கள் மற்றும் கேஜெட்டுகள் போன்ற ஆடம்பரப் பொருட்களுக்கு குறைவான விலைப்பட்டியல் மூலம் சட்டங்களை மீறியதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதன்மூலம் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில், கடந்த ஆறு மாதங்களில், 50,000 கோடி ரூபாய் வரை சீனாவுக்கு பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக, அமலாக்கத் துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை இதுதொடர்பாக துவக்கியுள்ள விசாரணையை மத்திய நிதி, உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களும் கூர்ந்து கவனித்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் பணம் மற்றும் மின்னணு பரிமாற்றங்கள் வாயிலாக நடந்திருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைத் தடுக்க, சீன இறக்குமதி பொருட்கள் மற்றும் இறக்குமதி நிறுவனங்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதுடன், நாட்டின் பொருளாதார பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்திவருவதாக அதிகாரிகள் கூறினர்.

Readmore: மின் வாரிய அதிகாரிகள் செல்போன் OFF செய்து வைக்க கூடாது…! அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை…!

Tags :
Advertisement