For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'என் துணைக்கு நீ தான்.. உன் துணைக்கு நான் தான்' மொரிஷியஸில் தனியாக ஜில் செய்யும் இளையராஜா!

05:35 PM May 02, 2024 IST | Mari Thangam
 என் துணைக்கு நீ தான்   உன் துணைக்கு நான் தான்   மொரிஷியஸில் தனியாக ஜில் செய்யும் இளையராஜா
Advertisement

மொரிஷியஸில் தான் தனியாக இருக்கும் புகைப்படத்தை இசையமைப்பாளர் இளையராஜா பகிர்ந்துள்ளார்.

Advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் அவரது 171ஆவது படமான ‘கூலி’ படத்தின் டீசர் வெளியானது. 'கூலி' படத்தின் டைட்டில் டீசரில் தன்னுடைய பாடலை தனது அனுமதி பெறாமல் பயன்படுத்தியுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார். தமிழ்நாட்டில் இளையராஜா பற்றிய விவாதங்கள் பற்றி எரிந்துக் கொண்டிருக்கின்றன.

இவ்விவகாரம் சூடுபிடித்து ஓடிக்கொண்டிருக்க, மொரிஷியஸ் தீவில் தான் தனிமையில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து இருக்கிறார் இசையமைப்பாளர் இளையராஜா. மொரிஷியஸ் தீவில் சுற்றுலா சென்றுள்ள இளையராஜா அங்கே ஒரு பீச் குடிலுக்கு அருகே ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்துக் கொண்டிருக்கும் லாங் ஷாட் போட்டோவை இளையராஜா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது இது வைரல் ஆகியுள்ளது. இது  இளையராஜா தனிமையில் தவிப்பதனை சுட்டிக்காட்டுவதாக அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கமெண்ட் இட்டு வருகின்றனர். மேலும் மகள் பவதாரிணியின் மரணத்துக்குப் பின், இளையராஜா யாரிடமும் அதிகம் பேசிக்கொள்வதில்லை எனவும்; தனிமையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tags :
Advertisement