முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சினிமா வரலாற்றில் முதல் முறையாக.. 'இசையமைப்பாளரே இல்லாமல் இளையராஜா பயோபிக்..'

02:09 PM May 16, 2024 IST | Mari Thangam
Advertisement

இசையமைப்பாளர் இளையராஜாவின் பயோபிக் அறிவிக்கப்பட்டதில் இருந்து யார் இசையமைப்பாளர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்து வந்த நிலையில், அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகவிருக்கிறது. கிட்டத்தட்ட 50 வருடங்களாக உலகம் எங்கும் வாழும் மனிதர்களை தனது இசையால் கட்டிப்போட்டு வைத்திருக்கும் அவர் தன்னுடைய வாழ்க்கையில் என்னவெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை இந்த பயோபிக் மூலம் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார். இளையராஜாவாக தனுஷ் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

படத்தின் ப்ரீ- புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்திற்கு யார் இசையமைப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில், இளையராஜா பயோபிக்கிற்கென்று தனியாக இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்யாமல் இளையராஜா இசையமைத்த இசையைப் பயன்படுத்த முடிவு செய்திருக்கிறார்களாம். இதனால், படத்திற்கென்று தனி இசையமைப்பாளர் இல்லை என்ற தகவல் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. 

இசையமைப்பாளராக யாரையும் ஃபிக்ஸ் செய்யாமல் படம் முழுவதும் இதுவரை இளையராஜா இசையமைத்த பாடல்கள், பின்னணி இசை ஆகியவைகளை பயன்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. ஒருவேளை இது நடக்கும்பட்சத்தில் இசையமைப்பாளர் இல்லாமல் உருவாகும் முதல் படம் இது என்ற பெயரை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 ‘குழந்தை வேண்டாம்.. 20 வருஷத்தை இழக்க தயாரா இல்ல’ – வைரலாகும் நிகில் காமத் கருத்து!

Tags :
Ilayaraja biopic
Advertisement
Next Article