முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மனிதனை மையப்படுத்தும் AI மையத்தை தொடங்கியது சென்னை ஐஐடி..!!

IIT Pravartak Technologies Foundation has launched a Center for Human Based Artificial Intelligence.
04:07 PM Nov 25, 2024 IST | Mari Thangam
Advertisement

மனிதனை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையத்தை ஐஐடி ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் தொடங்கியுள்ளது.

Advertisement

நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு அதிநவீன செயற்கை நுண்ணறிவுத் திட்டங்கள் மற்றும் தீர்வுகளில் தங்களின் திறன்களை வளர்த்துக் கொள்ள இந்த மையம் வாய்ப்பாக அமையும். ஐஐடி மெட்ராஸ்-ல் உள்ள மாணவ-மாணவிகள் தங்களின் இளங்கலை, முதுகலை, பிஎச்டி ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் ஆய்வறிக்கை சமர்ப்பித்தல் போன்றவைகளை இம்மையத்தின் வழிகாட்டுதலுடன் தொடரலாம். செயற்கை நுண்ணறிவில் திறமை படைத்தவர்களுக்கு தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ள இது உதவிகரமாக இருக்கும்.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கையில், ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் என்ற ‘மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையத்தை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. தொழில்நுட்ப மேம்பாடு, தொழில் முனைவோர் மேம்பாடு, மனிதவள மேம்பாடு, சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு உதவுவது உள்ளிட்டவை இந்த மையத்தின் செயல்பாடுகளில் அடங்கும்.

செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு என்பது கொள்கை வகுப்பாளர்கள், கட்டுப்பாட்டாளர்கள் மத்தியில் வளர்ந்துவரும் முக்கிய கவலையாகும். கட்டுப்பாடுகளுக்கும் புதுமைகளுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவது முக்கியமான ஒன்று. இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு பாதுகாப்பாகவும் பொறுப்புடனும் இருப்பதை உறுதி செய்யும் வகையில், எதிர்கால விதிமுறைகளை வகுப்பதில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிய இந்த மையம் உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மையத்தின் தாய் அமைப்பான சென்னை ஐஐடி ப்ரவர்த்தக், உச்ச நீதிமன்றம், இந்திய நாடாளுமன்றம், இந்திய ராணுவம் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டப் பணிகளில் பணியாற்றி வருகிறது. தட்சிண் பாரத் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் கே.எஸ்.பிரார் AVSM, சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி, சென்னை ஐஐடி பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் தலைமைச் செயல் அலுவலர் டாக்டர் எம்.ஜே.சங்கர் ராமன், CHAI தலைமை விஞ்ஞானி பேராசிரியர் கவுரவ் ரெய்னா மற்றும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இதர தொடர்புடையோர் முன்னிலையில் இந்த மையம் நவம்பர் 14, 2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த மையத்தின் எதிர்பார்ப்புகள் குறித்துப் பேசிய ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறும்போது, "மனித மையப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் இறுதிப் பயனர்கள் பெரும்பாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் உள்ளதாகவே தெரிகிறது. செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை ஈடுபடுத்துவதன் பல்வேறு அம்சங்களை, குறிப்பாக விளக்கத்திறன், பொறுப்புக் கண்ணோட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் கவனிக்கும் விதத்தில் CHAI-ன் பணிகள் அமைந்திருக்கும்" எனக் குறிப்பிட்டார்.

Read more ; ராமதாஸ் குறித்த அவதூறு பேச்சு.. முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்..!! – கொந்தளித்த அன்புமணி

Tags :
Centre For Human Centric AIHuman Centric AIIIT MadrasIIT Madras Pravartak
Advertisement
Next Article