முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விளையாட்டு காயங்களை கண்டறிய AI-அடிப்படையிலான அல்ட்ராசவுண்ட் ஸ்கேனர் கண்டுபிடிப்பு..!!

IIT Madras' new AI-based ultrasound scanner to detect sports injury on-field
06:57 PM Sep 17, 2024 IST | Mari Thangam
Advertisement

விளையாட்டில் ஏற்படக்கூடிய காயங்களைக் கண்டறிய பாயிண்ட் ஆஃப் கேர் அல்ட்ராசவுண்ட்’ (POCUS) ஸ்கேனரை ஐஐடி மெட்ராஸ் ஆய்வாளர்கள்,   உருவாக்கியுள்ளனர். இந்த ஆராய்ச்சியின் மூலம் காயங்களை கண்டறியவும், காயமடைந்த விளையாட்டு வீர்ர்களை தொடர்ந்து விளையாட அனுமதிக்கலாமா என்பதை அறியவும் முடியும்.

Advertisement

செயற்கை நுண்ணறிவில் இயங்கும் இந்த POCUS ஸ்கேனரில் விளையாட்டு மருத்துவம் தொடர்பாக பரந்த அளவிலான பயன்பாடுகள் இடம்பெற்றுள்ளன. மற்ற நடைமுறைகளுடன் ஒப்பிடுகையில் பாதுகாப்பு நன்மைகளையும், போதிய தெளிவுத்திறனையும் கொண்டுள்ளது. ‘பயோமெடிக்கல் அல்ட்ராசவுண்ட் இமேஜிங் லேபி’ல் (BUSi) உருவாக்கப்பட்ட தசைக்கூட்டு (MSK) இமேஜிங்கிற்கான ‘POCUS’ முன்மாதிரி தற்போது தயார்நிலையில் உள்ளது.

2024-ம் ஆண்டிற்குள் இந்த தயாரிப்பு முன்மாதிரியை நிறைவுசெய்வது என ஆராய்ச்சியாளர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, விளையாட்டுத்துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைத்து ஆடுகளத்தில் இருந்து பரிசோதித்தல் மற்றும் சோதனையின் தரவுகளை சேகரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சாதனத்தை உருவாக்கி குழுவை வழிநடத்திய ஐஐடி மெட்ராஸ் அப்ளைடு மெக்கானிக்ஸ் மற்றும் உயிரிமருத்துவப் பொறியியல் துறை பேராசிரியர் அருண் கே.திட்டாய் கூறுகையில், “தற்போது தொழில்நுட்ப இடைவெளி இருப்பதை உணர்ந்தோம். அதேபோன்று, முன்னணி விளையாட்டு வீரர்கள் காயத்தின் மேலாண்மைக்கும் மறுவாழ்வுக்கும் வழக்கமான பயிற்சியை மேற்கொள்ளும் வகையில் வளாகத்திற்குள் ஒரு சாதனம் அவசியம் என்பதையும் கவனித்தோம். தசைக்கூட்டுக்கான மதிப்பீட்டை ஆடுகளத்திலேயே விரைந்து மேற்கொள்வதன் மூலம், விளையாட்டு வீரர்களை உடனடியாக கவனிக்கவும், காயங்களில் இருந்து மீண்டுவர கவனம் செலுத்தவும் முடியும்,” என்று கூறினார்.

ஐஐடி மெட்ராஸ் செஸ்ஸா தலைமைச் செயல் அலுவலர் ரமேஷ்குமார் கூறுகையில், “உள்நாட்டுத் தயாரிப்பில் கவனம் செலுத்தும் வகையில் முழு முயற்சியோடு இந்த சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்,”என்றார்.

பயன்பாடு

மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் அண்மைக்காலத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்போது, மருத்துவ சாதனங்கள்/ தொழில்நுட்பங்களை அணுகுவதில் மிகப்பெரிய இடைவெளி இருந்து வரும் சூழலில், வழக்கமான பயிற்சிகளின்போது இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தலாம். இதுபோன்ற அணுகுமுறையின் மூலம் விளையாட்டு வீரர்களைப் பராமரிப்பதில் முன் உதாரணமாகத் திகழக்கூடிய வகையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், சான்று அடிப்படையிலான பயிற்சிகளை மேற்கொள்ளவும், காயம் ஏற்படாமல் தடுக்கவும் உதவும்.

ஐஐடி மெட்ராஸில் உள்ள இந்த ஆய்வகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முயற்சிகளுக்கு அரசு அமைப்புகளின் பல்வேறு ஆராய்ச்சி மானியங்கள் மூலம் தொடர்ந்து நிதியுதவியை வழங்கி வருகின்றன. ஐஐடி மெட்ராஸ்-ன் உயர்தர விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான சிறப்பு மையத்தின் (CESSA) மூலம் பாயிண்ட் ஆஃப் கேர் அல்ட்ராசவுண்ட் (POCUS) ஸ்கேனருக்காக ஆராய்ச்சிக் குழுவினருக்கு தற்போது நிதியளிக்கப்பட்டுள்ளது.

Read more ; மண் வீடு To லண்டன்.. ரூ.2.07 கோடி சம்பளத்தில் கூகுள் நிறுவனத்தில் வேலை.. பீகார் சிறுவன் சாதனை..!!

Tags :
AI-based ultrasound scannerIIT Madras
Advertisement
Next Article