ஆதாரம் இல்லாமல் நான் எதுவும் சொல்லல.. கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கு..!! - அடித்து சொல்லும் ஐஐடி இயக்குநர்
கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் அதற்கு ஆதாரம் இருக்கிறது எனவும் ஐஐடி இயக்குனர் காமகோடி மீண்டும் கூறியது சர்ச்சையாகியுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் அமைந்துள்ள கோ சம்ரக்ஷணா கோசாலையில் மாட்டுப் பொங்கலுக்கு கோ பூஜை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி பங்கேற்றார். அந்த நிகழ்வில் அவர் பேசுகையில், எனது அப்பாவுக்கு காய்ச்சல் அடித்தது. ஒரு சந்நியாசி வந்தார். அவரிடம் மருத்துவரை கூப்பிடலாமா என்று கேட்டார். அந்த சந்நியாசி மாட்டின் கோமியத்தை குடிக்க சொன்னார். உடனே கோமியத்தை எடுத்து வந்து அப்பா குடித்தார். 15 நிமிடத்தில் அவருக்கு ஜீரம் போய்விட்டதாம்.
பாக்டீரியா, பூஞ்சை, செரிமான கோளாறு உள்ளிட்ட பல உடல் பாதிப்புகளை எதிர்க்க கோமியம் சிறந்த மருத்துவ குணத்தை கொண்டது. இந்த மருத்துவ குணம் கொண்ட கோமியத்தை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என அவர் பேசியுள்ளார். அறிவியல் பூர்வமாக கோமியம் குடிப்பதற்கு உகந்தது இல்லை எனக் கூறப்படும் நிலையிலும், கோமியம் காய்ச்சலை போக்கும் என்ற சர்ச்சையான கருத்துக்களை சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடு கூறியது, விவாத பொருளாக மாறியது.
இந்தநிலையில், பண்டிகையின்போது நான் பஞ்சகவ்யம் உண்பது வழக்கம் என சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி மீண்டும் சர்ச்சையாக பேசி உள்ளார். பஞ்சகவ்யத்தில் மருத்துவ குணங்கள் உள்ளது என்பதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. கோமியம் தொடர்பாக சென்னை ஐஐடியில் ஆராய்ச்சி செய்ய முயற்சி மேற்கொள்ளப்படும். கோமியத்தை குடித்தால் உடல்நல பாதிப்பு ஏற்படும் என வெளிவந்துள்ள ஆராய்ச்சி குறித்து நான் படிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Read more ; சட்டவிரோத குடியேற்றம்… 586 பங்களாதேஷ் நாட்டினர், 318 ரோஹிங்கியாக்கள் கைது….!