முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சர்வதேச திரைப்பட விழா...! 270-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது....!

09:18 AM Nov 19, 2023 IST | 1newsnationuser2
Advertisement

சர்வதேச திரைப்பட விழாக்களை நிர்வகிக்கும் சர்வதேச அமைப்பான சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (எஃப்.ஐ.ஏ.பி.எஃப்) அங்கீகாரம் பெற்ற உலகின் 14 மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்திய சர்வதேச திரைப்பட விழாவும் ஒன்றாகும்.

Advertisement

கேன்ஸ், பெர்லின் மற்றும் வெனிஸ் போன்ற சர்வதேச திரைப்பட விழாக்கள் இந்தப் பிரிவின் கீழ் எஃப்.ஐ.ஏ.பி.எஃப்-வால் அங்கீகரிக்கப்பட்ட பிற புகழ்பெற்ற விழாக்களாகும். இந்த இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20-ம் தேதி தொடங்குகிறது. ஐநாக்ஸ் பாஞ்சிம், மக்வினெஸ் பேலஸ், ஐநாக்ஸ் போர்வோரிம், இசட் ஸ்கொயர் சாம்ராட் அசோக் ஆகிய 4 இடங்களில் 270-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

இதில் விருதுக்காக 15 ஓடிடி தளங்களில் இருந்து 10 மொழிகளில் 32 பதிவுகள் வந்துள்ளன என்றும் தேர்வு செய்யப்படும் வெப் தொடர் குறித்த அறிவிப்பு நிறைவு விழாவில் வெளியிடப்படும் .

Advertisement
Next Article