For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"வாங்கிய தங்கம் வீட்டில் தங்கவில்லையா.?" இந்தப் பரிகாரங்களை உடனடியாக செய்யுங்கள்.!

06:22 AM Dec 01, 2023 IST | 1newsnationuser4
 வாங்கிய தங்கம் வீட்டில் தங்கவில்லையா    இந்தப் பரிகாரங்களை உடனடியாக செய்யுங்கள்
Advertisement

தங்க நகைகளை விரும்பாதவர்கள் யார் தான் இருக்க முடியும். குறிப்பாக பெண்களுக்கு எவ்வளவுதான் தங்க நகைகள் இருந்தாலும் புதிய நகைகள் வாங்குவதில் ஆர்வம் என்றுமே குறையாது. எனினும் குடும்பங்களில் ஏற்படும் சில அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக வாங்கிய தங்கத்தை அடகு வைத்து பணம் ஈட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். இப்படியான சூழ்நிலை வராமல் இருக்க செய்ய வேண்டிய பரிகாரங்களை பற்றி காண்போம்.

Advertisement

வெள்ளிக்கிழமை அன்று சாமிக்கு பூஜை செய்யும் போது பித்தளை அல்லது செம்பு தட்டில் வீட்டிலிருக்கும் ஒரு தங்க நகையை வைத்து மலர்கள் தூவி தீபா ஆராதனை காட்டி மீண்டும் அதனை பீரோவில் வைக்கவும். அப்போது தங்க நகையுடன் மூன்று ஏலக்காய் மூன்று கிராம்பு மற்றும் இரண்டு துளசி இலைகளையும் சேர்த்து வைக்கவும். இரண்டு நாட்கள் கழித்து காய்ந்த துளசி இலைகளை நீக்கிவிடவும். பின்னர் அடுத்து வெள்ளிக்கிழமை வரும்போது ஏலக்காய் மற்றும் கிராம்பை மாற்றி வைக்கவும். இவ்வாறு செய்து வர தங்கம் வீட்டில் நிலையாக தங்கும்.

புதியதாக தங்கம் வாங்குபவர்கள் தங்கம் வாங்கிக் கொண்டு வரும்போது மஞ்சள் கிழங்கு குங்குமம் துளசி அல்லது தாமரை பூவையும் தங்கத்துடன் சேர்த்து வாங்கி வர வேண்டும். வீட்டிற்கு வந்தவுடன் இவற்றை பூஜை அறையில் சிறிது நேரம் வைத்து பூஜை செய்துவிட்டு மஞ்சள் நீர் தெளித்து நகைகளை பீரோவில் வைக்கவும். அவற்றுடன் துளசி இலைகள் குங்குமம் மற்றும் மஞ்சள் ஆகியவற்றையும் வைக்கவும். இவற்றை வைக்கும் போது தாமரை அல்லது துளசி இலைகள் காய்ந்து விட்டால் அவற்றை அகற்றி விடவும்.

வெள்ளிக்கிழமை அன்று பூஜை செய்துவிட்டு ஒரு மஞ்சள் துணியை எடுத்து அதில் 5 ஏலக்காய் 5 கிராம்பு மற்றும் கற்பூரம் ஆகியவற்றை வைத்து ஒன்றாக கட்டி அதனையும் நகையுடன் சேர்த்து பீரோவில் வைக்கவும். இவ்வாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாற்றி செய்து வர தங்கம் வீட்டில் நிலையாக தங்குமென்று சாஸ்திரங்கள் சொல்கிறது.

Tags :
Advertisement