’சீமானை பற்றி பேசினால் உடனே அட்டாக் பண்ணனும்’..!! சாட்டை துரைமுருகனின் சர்ச்சை ஆடியோ..!!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகாரில் வழக்குப்பதிவு செய்து அது தொடர்பான அறிக்கையை செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டுமென தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து, விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தில் அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை போலீசார் கைது செய்தனர். இது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ”ஏற்கனவே அதிமுக மேடைகளில் பாடப்பட்ட, கருணாநிதி குறித்த பாடலை பாடியதற்காக, சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளனர். அதே பாடலை நான் பாடுகிறேன். அந்தப் பாடலை எழுதியது வேறு யாரோ. அவர்கள் எழுதியதை பாடினோம்” எனக் கூறி அந்தப்பாடலை பாடினார்.
அதில் பெற்றிருந்த ஒரு வார்த்தை, குறிப்பிட்ட சமூகத்தை குறிப்பிடுவதாக புகார் எழுந்தது. அவர் தெரிந்தே, அந்த வார்த்தையை பயன்படுத்தியதால் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஜேஷ் என்பவர் சென்னை பட்டாபிராம் காவல்நிலையத்தில் புகாரளித்தார். தற்போது அந்த புகாரின் மீது தான் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில், தற்போது சாட்டை துரைமுருகனின் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், “சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியை பற்றியோ அல்லது சீமானை பற்றியோ அல்லது கட்சியில் இருக்கும் முக்கியமாக ஆட்களை பற்றி எழுதினால் ஒரு குரூப் வந்து அட்டாக் பண்ணும் என்கிற பயம் அவங்களுக்கு இருக்கணும்” என்று தெரிவித்துள்ளார்.