For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இனிமேல் தும்மல் வந்தால் அடக்காதீர்கள்!… மூச்சுக்குழாயில் ஏற்படும் விபரீதம்!

02:56 PM Dec 16, 2023 IST | 1newsnationuser3
இனிமேல் தும்மல் வந்தால் அடக்காதீர்கள் … மூச்சுக்குழாயில் ஏற்படும் விபரீதம்
Advertisement

தும்மலை அடக்க முயன்ற நபரின் மூச்சுக் குழாயில் துளை ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கார் ஓட்டிச் சென்ற நபருக்கு திடீரென சளி ஏற்பட்டதால் இந்த சம்பவம் நடந்துள்ளது. இருப்பினும், தும்மல் ஏற்பட்ட போது அந்த நபர் மூக்கை அழுத்தி வாயை மூடியுள்ளார். இந்த விசித்திரமான தும்மல் கட்டுப்பாட்டு நுட்பம் கடுமையான எதிர்விளைவை ஏற்படுத்தியது.

Advertisement

அடக்கப்பட்ட தும்மலின் விசை அவரது சுவாசக் குழாயில் 2/2 மில்லிமீட்டர் அளவில் துளையை ஏற்படுத்தியது, இது மிகவும் அரிதான நிகழ்வு என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தும்மலை அடக்கிய போது காற்றுப்பாதை மூடல் அழுத்தத்தை உருவாக்கியது, இது வழக்கத்தை விட 20 மடங்கு வலிமையான தும்மலைத் தூண்டியது, பயங்கர சேதத்தை ஏற்படுத்தியது என்று லைவ் சயின்ஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த நபருக்கு தோலின் ஆழமான திசு அடுக்குகளுக்குப் பின்னால் காற்று சிக்கிக்கொள்ளும் ஒரு நோயான எம்பிஸிமா அந்த மனிதனுக்கு இருந்தது என்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்தது. பின்னர், CT ஸ்கேன் பரிசோதனையில், அவரது கழுத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது முதுகெலும்புகளுக்கு இடையில் மூச்சுக்குழாய் கிழிந்திருப்பது தெரியவந்தது. மேலும் அவரது நுரையீரல் மற்றும் அவரது மார்புக்கு இடையே உள்ள பகுதியில் காற்று கூடியிருந்தது. மூக்கு மற்றும் வாயை மூடிவிட்டு தும்மும்போது மூச்சுக்குழாயில் விரைவான அழுத்தம் அதிகரிப்பதால் இந்த சேதம் ஏற்பட்டது என்று மருத்துவ நிபுணர்கள் முடிவு செய்தனர்.

எனினும் அந்த நபருக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், ஆக்ஸிஜன் உட்பட அவரது முக்கிய அறிகுறிகள் சீராக இருப்பதை உறுதி செய்வதற்காக அவர் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சாஜ் ஆகும் போது அவருக்கு வலி நிவாரணி மற்றும் காய்ச்சலுக்கான மருந்துகளை வழங்கினர். மேலும் இரண்டு வாரங்களுக்கு உடல் ரீதியாக கடினமான செயல்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தினர். ஐந்து வாரங்களுக்குப் பிறகு CT ஸ்கேன் சோதனை மூலம் மூச்சுக்குழாய் இருந்த துளை முழுவதுமாக குணமாகிவிட்டதைக் காட்டியது.

"வாயை மூடிக்கொண்டு மூக்கையும் பிடித்துக் கொண்டு மூலம் தும்மலை அடக்க வேண்டாம் என்று அனைவருக்கும் அறிவுறுத்தப்பட வேண்டும், ஏனெனில் இது மூச்சுக்குழாய் (காற்று குழாய்) துளையிடலுக்கு வழிவகுக்கும்" என்று ஆசிரியர்கள் BMJ கேஸ் ரிப்போர்ட்ஸ் இதழில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags :
Advertisement