குளித்துவிட்டு இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க..!! இவ்வளவு ஆபத்து இருக்கா..? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
நம்மில் பலர் தலைக்கு குளித்த பின் சுகமாக தூங்குவோம். முடி ஈரமாக இருப்பதை கூட பொருட்படுத்தாமல் தலைக்கு குளித்த உடனேயே ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்வோம். குழந்தையாக இருக்கும் போது, ஈரமான முடியை சரியாக உலர வைக்க வேண்டும் என்று அம்மா சொல்வார்கள். இல்லையென்றால், உங்களுக்கு சளி பிடிக்கும். ஆனால், அவருடைய வார்த்தைகளை பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஈரமான முடியுடன் தூங்குவது ஆரோக்கியத்திற்கு நல்லதா? இதன் தீமைகள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஈரமான முடியுடன் தூங்குவது நல்லதா..?
ஈரமான முடியுடன் தூங்குவது நல்லதல்ல என்று மருத்துவர் தேவேஷ் என்பவர் கூறியுள்ளார். உங்கள் முடி ஈரமாக இருக்கும் போது, அது எளிதில் உடைந்து உங்கள் முடி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் உங்கள் தலைமுடி ஈரமாக இருந்தால், உலர்த்திய பின் தூங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஈரமான கூந்தலுடன் தூங்கினால், முடி பெட்ஷீட் அல்லது தலையணையில் சிக்கி உடைந்துவிடும். இது முடி வேரில் வலி அல்லது காயத்தை ஏற்படுத்தும். ஈரமான கூந்தலுடன் தூங்குவது, பூஞ்சை மற்றும் பிற நோய்த்தொற்றுகளைத் தடுக்கும் உச்சந்தலையின் திறனைக் குறைக்கும்.
மேலும், தலைமுடியில் தண்ணீர் இருந்தால் இரவில் தூங்கினால் தலைவலி ஏற்படும். உங்கள் முடியை சேதப்படுத்தும். ஏனெனில், ஈரமான முடி மிகவும் மென்மையானது மற்றும் விரைவாக உடைந்துவிடும். ஈரமான கூந்தலுடன் உறங்குவதால், உங்கள் உச்சந்தலையில் பூஞ்சை தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது பெரும்பாலும் முடியின் கீழ் ஈரப்பதத்தால் ஏற்படுகிறது. சிலருக்கு ஈரமான கூந்தல் அலர்ஜியாக இருக்கலாம். இது இரவில் தூங்கும் போது பிரச்சனையை ஏற்படுத்தும்.
Read More : மகளிர் உரிமைத்தொகை இன்னும் கிடைக்கவில்லையா..? விண்ணப்பிக்க மீண்டும் ஓர் வாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!