For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ஏசி போட்டு தூங்கினால் இந்த பிரச்சனையை சந்திப்பீர்கள்..!! எச்சரிக்கையா இருங்க..!!

04:55 PM Apr 23, 2024 IST | Chella
ஏசி போட்டு தூங்கினால் இந்த பிரச்சனையை சந்திப்பீர்கள்     எச்சரிக்கையா இருங்க
Advertisement

கோடை காலம் தொடங்கிவிட்டதால் பலரும் ஏசி அறையில் தஞ்சம் அடைய தொடங்கிவிட்டார்கள். நகர்ப்புறம் மட்டுமல்லாமல் பல கிராமங்களிலும் இன்று ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. ஏசி அறையில் அமர்ந்திருக்கும் போது வெயின் தாக்கம் வெகுவாக குறைவதால், பல வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏசி-யை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இது பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும் என பலருக்கும் தெரியாது. ஏசி போட்டுக் கொண்டு தூங்குவதால் ஏற்படக்கூடிய 6 உடல்நலப் பிரச்சனைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisement

சுவாசப் பிரச்சனை : ஏசி அறையில் படுத்து தூங்குவதால், சுவாசப் பிரச்சனைகள் வரக்கூடும். குறிப்பாக, குளிர் காற்று ஒத்துக்கொள்ளாதவர்களுக்கும் ஏற்கனவே ஆஸ்துமா அல்லது அலர்ஜி போன்ற சுவாசப் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கும் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். ஏசியில் இருந்து வெளிவரும் குளிர் காற்று நமது சுவாசப் பாதையை எரிச்சல்படுத்தி இருமல், மூச்சிறைப்பு, நெஞ்சடைப்பு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். மேலும், ஏசியை ஒழுங்காக பராமரிக்காவிட்டால் மாசடைந்த காற்று அறையில் பரவி சுவாசக் கோளாறை உண்டாக்கும். இந்தப் பாதிப்பை குறைக்க ஏசியை எப்போதும் மிதமான குளிர்நிலையில் இயக்குங்கள்.

கண் மற்றும் சரும வறட்சியை ஏற்படுத்தும் : ஏசி அறையில் தூங்கும் போது. அந்த அரையின் ஈரப்பதம் குறைவாக இருப்பதால், நம் கண்களும், சருமமும் உலர்ந்து போகின்றன. மேலும், நீண்ட நேரம் நம் உடலில் குளிர் காற்று படுவதாலும் கண்களில் எரிச்சல் உண்டாக்குகின்றன. மேலும், கண் அரிப்பு, சிவந்து போதல், மங்கலான பார்வை போன்ற பிரச்சனைகளை உருவாகும்.

அலர்ஜி : ஏசி இயந்திரத்தை ஒழுங்காக பராமரிக்காவிட்டால் அறை முழுவதும் தூசிகள், அழுக்குகள் ஆகியவற்றை பரவச்செய்யும். இது சில நபர்களுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். மேலும், ஏசி இயங்கும் அறையில் குளிர்ச்சியான வெப்பநிலை இருப்பதால் அங்கு ஈரப்பதம் குறைவாகவே இருக்கும். இதனால் ஒவ்வாமை மற்றும் காற்று மாசுபடுத்திகள் அறையில் சேகரமாவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகும் : ஏசி அறையில் படுத்து தூங்குவதால், சுவாச தொற்றுகள் வரும் ஆபத்து அதிகரிக்கும். ஏனென்றால் குளிர் காற்று உடலின் நோய் எதிர்பு சக்தியை பலவீனப்படுத்தி எளிதில் வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகள் பரவுவதற்கு காரணமாக அமைகிறது. மேலும், குளிர்ச்சியான வெப்பநிலையில் நீண்ட நேரம் இருப்பதால் மேல் சுவாசப் பாதையில் உள்ள ரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்படுகிறது. இதனால் ஒட்டுண்ணிகள் மற்றும் வைரஸ்களை தடுக்கும் சக்தி உடலில் குறைகிறது.

தூக்கத்தை தொலையும் : ஏசி அறையில் தூங்கும்போது தூக்கம் பாதிக்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக ஏசியின் வெப்பநிலையை மிகவும் குறைவாக வைத்திருந்தாலோ அல்லது ஏசியில் இருந்து வரும் ஓசையின் காரணமாகவோ உங்கள் தூக்கம் தொலைகிறது. குளிர் அதிகமாக இருப்பதால் நடு இரவில் முழித்துக்கொள்ளும் சூழலும் ஏற்படுகிறது.

தசை இறுக்கம் : ஏசி அறையில் படுத்து உறங்குவதால் தசைகளில் இறுக்கமும் மூட்டுகளில் வலியும் உண்டாகிறது. மேலும், கீல்வாதம் அல்லது தசைக்கட்டு கோளாறு உடையவர்களுக்கு குளிர் காற்றின் காரணமாக மூட்டு வலி அதிகரிக்கும். இதை குறைக்க தூங்கும் போது போர்வைகளால் உடலை மூடிக் கொள்ளலாம். அதோடு தூங்க செல்வதற்கு முன் உடலை நீட்டி வளைக்கும் பயிற்சிகளை செய்வதன் மூலம் மூட்டுகளுக்கு தளர்வை கொடுக்கலாம். ​

Read More : தமிழ்நாட்டில் 4-வது கஞ்சா தாக்குதல்..!! முதல்வரே எப்போது விழிப்பீர்கள்..? அண்ணாமலை சரமாரி தாக்கு..!!

Advertisement