கவனம்.. ஒரே நாளில் இந்த தொகைக்கு மேல் பணம் பெற்றால்... வீட்டுக்கு வருமான வரி நோட்டீஸ் வரும்..
அதிக மதிப்புள்ள பணப் பரிவர்த்தனைகளை வருமான வரித் துறை கவனமாகக் கண்காணித்து வருகிறது. எனவே வரி செலுத்துவோர் அதிகளவில் பணப் பரிவர்த்தனை செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 269ST-ன் படி, ஒரே நாளில் ரூ.2 லட்சம் வரை மட்டுமே ரொக்கமாக பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். எனவே ரூ. 2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது.. இந்த வரம்பை மீறினால், அபராதம் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.
வருமான வரித் துறையானது குறிப்பிட்ட வரம்புகளைத் தாண்டி அதிக மதிப்புள்ள ரொக்கப் பரிவர்த்தனைகளை கண்காணிக்கிறது. ஒரு நாளின் அதிகபட்ச வரம்பை மீறும் போது, வருமான வரித்துறை நோட்டீஸ் கூட அனுப்பலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வருமான வரிச் சட்டத்தின் 269ST பிரிவு, ஒரு நாளில் ஒரு நபரிடம் இருந்து மொத்தமாக ரூ. 2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை ஒரே பரிவர்த்தனை மூலம் எந்த நபரும் பெற முடியாது என்று கூறுகிறது.
இந்த கட்டுப்பாடு தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும், பணம் செலுத்துபவரை விட பணத்தைப் பெறுபவருக்கு இணங்க வேண்டிய பொறுப்பு உள்ளது.
நீங்கள் ரூ.2 லட்சத்துக்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்தாலோ அல்லது ஒரே நாளில் அவ்வளவு தொகையைப் பெற்றாலோ வருமான வரித்துறை அபராதம் விதிக்கலாம். வரி நிபுணர் பல்வந்த் ஜெயின் இதுகுறித்து பேசிய போது “ நீங்கள் ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிவர்த்தனை செய்தால், வருமான வரித் துறை தணிக்கையின் போது விதிமீறலைக் கண்டறிந்தால், அதே தொகையை அபராதமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
2 லட்சத்திற்கு மேல் ரொக்கத்தை பெற்றுக்கொண்டவர்கள், இந்த விதியை மீறி, பெறப்பட்ட பணத்திற்கு இணையான அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.” என்று தெரிவித்தார்.
எனினும் இந்த விதிகளின் கீழ் பணம் செலுத்துபவருக்கு பொறுப்பு இல்லை என்பது கவனிக்கத்தக்கது. மொத்தத்தில் வருமான வரி சட்டத்தின்படி, ஒரு நபரிடமிருந்து ஒரே நாளில் ரூ.2 லட்சத்திற்கு மேல் பணம் பெற முடியாது. இருப்பினும், இந்த விதிக்கு சில விதிவிலக்குகள் உள்ளன. அதாவது, வங்கி நிறுவனங்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
Read More : தினமும் வெறும் ரூ. 45 சேமித்தால் ரூ.25 லட்சம் கிடைக்கும்.. LIC-ன் அசத்தல் திட்டம் பற்றி தெரியுமா?