மனைவி பெயரில் மாதம் ரூ.1000 முதலீடு செய்தால்.. கோடிகளை அள்ளலாம்..!! இந்த திட்டம் பற்றி தெரிஞ்சுக்கோங்க..
ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் தரும் திட்டத்தைத் பலர் தேடுகிறோம். மனைவி பெயரில் முதலீடு செய்வதே இதற்கு சரியான தீர்வு. இந்த தனி கணக்கை மனைவி பெயரில் துவக்க வேண்டும். தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) உங்கள் மனைவிக்கு 60 வயதை அடையும் போது ஒரு பெரிய தொகையை வழங்குகிறது. இது தவிர, ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெறலாம். NPS கணக்கின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு எவ்வளவு ஓய்வூதியம் வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். இதனாலேயே வயதான காலத்தில் பணத்தைப் பற்றிய டென்ஷன் இல்லை.
புதிய ஓய்வூதிய முறை (தேசிய ஓய்வூதிய அமைப்பு) கணக்கைத் தொடங்கிய பிறகு, உங்கள் வசதிக்கேற்ப மாதாந்திர அல்லது ஆண்டு அடிப்படையில் பணத்தை டெபாசிட் செய்யலாம். வெறும் ரூ.1,000 மூலம் உங்கள் மனைவி பெயரில் என்பிஎஸ் கணக்கைத் தொடங்கலாம். முதலீட்டாளர் 60 வயதை அடையும் போது NPS கணக்கு முதிர்ச்சியடைகிறது. புதிய விதிகளின்படி, இந்தக் கணக்கை 65 வயது வரை என்பிஎஸ் கணக்காகத் தொடரலாம்.
உங்கள் மனைவிக்கு இப்போது 30 வயது என்று வைத்துக்கொள்வோம். NPS கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 டெபாசிட் செய்தால், அது வருடத்திற்கு ரூ.60,000 முதலீடு ஆகும். இப்படி தொடர்ந்து 30 வருடங்கள் முதலீடு செய்தால் உங்கள் மொத்த முதலீடு ரூ.18 லட்சமாக இருக்கும். 60 வயதில் ஓய்வுபெறும் போது உங்களிடம் ரூ.1,76,49,569 இருக்கும். சராசரி வட்டி விகிதம் 12% என்று வைத்துக் கொண்டால், வட்டி மட்டும் ₹1,05,89,741 ஆக இருக்கும்.
Read more ; மாதவிடாய் காலத்தில் கருமுட்டை வெளிப்படுமா?. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!