முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”தேசியக் கொடி ஏற்றுவதை தடுத்தால் குண்டர் சட்டம்”..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

The judge has given a sensational opinion that those who prevent the hoisting of the national flag on the occasion of Independence Day should be jailed under thug law.
05:02 PM Aug 12, 2024 IST | Chella
Advertisement

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று (ஆகஸ்ட் 12) காலை வழக்குகளை விசாரிக்க துவங்கும் முன், சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியிருப்பு நல சங்கத்தில் கொடியேற்றுவதை முன்னாள் நிர்வாகிகள் தடுப்பதை எதிர்த்து வழக்கு தொடர இருப்பதாகவும், அதனை நாளை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்திருந்தார்.

Advertisement

மேலும், தேசிய கொடி ஏற்றும்போது காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், சுதந்திர தினத்தை ஒட்டி தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.

தேசியக் கொடியேற்ற பாதுகாப்பு வழங்குவது அவமானம் என்றும், கொடி ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது என்றும் அப்படி தடுப்போர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் வழக்கு தொடரலாம் என்றும் நீதிபதி அதிரடியாக தெரிவித்தார்.

Read More : Reserve Bank of India-வில் வேலை வேண்டுமா..? விண்ணப்பிக்க இன்றே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tags :
காவல்துறைகுண்டர் சட்டம்சென்னை உயர்நீதிமன்றம்நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன்
Advertisement
Next Article