வீட்டின் பூஜையறையில் இந்த 2 சிலைகளை வைத்தால்.. பணத்திற்கு பஞ்சமே வராது.. வறுமை நீங்கும்..!
வாஸ்து சாஸ்திரம் என்பது பழங்கால இந்திய கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு அறிவியல் ஆகும். இயற்கை மற்றும் பிரபஞ்சத்தின் விதிகள் மூலம் நேர்மறை ஆற்றலை உருவாக்க முடியும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. வாஸ்து விதிகளை பின்பற்றுவதன் மூலம் வீட்டிற்குள் வசிப்பவர்களுக்கு செழிப்பையும் மகிழ்ச்சியையும் கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீடு கட்டுவது, இணக்கமான, சமநிலையான மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு உகந்த இடத்தை உருவாக்க உதவும். ஒரு வீட்டில் எந்தெந்த அறைகள் எந்தெந்த திசையில் இருக்க வேண்டும்? எந்தெந்த பொருட்களை எங்கு வைக்க வேண்டும்? எங்கு வைக்க கூடாது? வீட்டில் இருக்கும் பொருட்கள் எந்த நிறத்தில் இருக்க வேண்டும் என்பது குறித்து வாஸ்து சாஸ்திரம் தெளிவாக விளக்குகிறது.
அந்த வகையில் உங்கள் வீட்டில் பணம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பிற சிரமங்களை சமாளிக்க உங்கள் வீட்டு பூஜையறையில் இரண்டு குறிப்பிட்ட சிலைகளை வைக்க வாஸ்து சாஸ்திரம் பரிந்துரைக்கிறது.
இந்த சிலைகள் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் மற்றும் உங்கள் வீட்டில் அமைதி மற்றும் செழிப்பை உறுதி செய்யும் என்று நம்பப்படுகிறது. அவை எந்தெந்த சிலைகள் தெரியுமா?
லட்சுமி தேவி மற்றும் குபேர கடவுள் சிலைகள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, நீங்கள் நன்றாக பணம் சம்பாதித்தாலும், வீட்டில் அந்த செல்வத்தை தக்கவைக்க கடினமாக இருந்தால், உங்கள் பூஜை அறையில் லட்சுமி தேவி மற்றும் குபேரனின் சிலைகளை வைக்க வேண்டும்..
லட்சுமி தேவி: செல்வம் மற்றும் செழிப்பின் தெய்வம் என்று அழைக்கப்படும் லட்சுமி, வீட்டிற்கு நிதி செழிப்புடன் அருள்பாலிக்கிறார் என்று நம்பப்படுகிறது. எனவே லட்சுமி தேவியின் சிலையை வீட்டின் பூஜையறையில் வைப்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
குபேர பகவான்: இந்து புராணங்களில் செல்வத்தின் அதிபதியாக குபேரன் பகவான் கருதப்படுகிறார். வீட்டின் பூஜையறையில் குபேரன் சிலையை வைத்தால் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. இவ்விரு சிலைகளை ஒன்றாக வழிபட்டால் பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி, செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
சிலைகளை எங்கு வைக்க வேண்டும்?
பூஜையறையின் வடக்கு அல்லது வடகிழக்கு மூலையில் சிலைகள் வைக்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.. ஏனெனில் இந்த திசைகள் மங்களகரமானதாகக் கருதப்படுகின்றன. இந்த இரு சிலைகளை தினமும் வழிபடுவதன் மூலம், வீட்டிற்கு எதிர்பாராத செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. வீட்டில் உள்ள பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
Read More : தவறுதலாக கூட இந்த 5 இடங்களில் துளசி செடியை வைக்காதீங்க.. வறுமை, துரதிர்ஷ்டம் வரலாம்…