For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’ஓட்டுக்கு பணம் கொடுத்தால் பெற்றுக் கொள்ளுங்கள்’..!! ’ஆனால் இதை மட்டும் செய்யாதீங்க’..!! ட்விஸ்ட் வைத்த விஜய் ஆண்டனி..!!

08:49 AM Apr 09, 2024 IST | Chella
’ஓட்டுக்கு பணம் கொடுத்தால் பெற்றுக் கொள்ளுங்கள்’     ’ஆனால் இதை மட்டும் செய்யாதீங்க’     ட்விஸ்ட் வைத்த விஜய் ஆண்டனி
Advertisement

தேர்தலுக்காக வாக்குக்கு பணம் கொடுத்தால் அதனை பெற்றுக்கொள்ளுங்கள் என விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.

Advertisement

40-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய விஜய் ஆண்டனி "நான்" திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இசையமைப்பாளர், நடிகர் என பலமுகங்களை கொண்ட விஜய் ஆண்டனி பல படங்களில் நடித்தும், இசையமைத்துள்ளார்.

பல படங்களில் நடித்தாலும் பூ பட இயக்குநர் சசி இயக்கத்தில் இவர் நடித்த "பிச்சைக்காரன்" படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றது. இவர் நடிப்பில் கடைசியாக "கொலை" படம் வெளியானது. தற்போது அவர் ரோமியோ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த விஜய் ஆண்டனி தேர்தல் குறித்து மக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

"அரசியல் கட்சியினர் வாக்குக்கு பணம் கொடுத்தால் அதை தாராளமாக வாங்கிக்கொள்ளுங்கள். வாக்குக்கு பணம் கொடுப்பதோ பெறுவதோ தவறாக இருந்தாலும் வறுமை, குடும்ப சூழ்நிலை கருதி அதனை பெற்றுக்கொள்ளலாம். அது உங்கள் பணம்தான். ஆனால், பணம் பெற்றுவிட்டோம் என்பதற்காக அந்தக் கட்சிக்குத்தான் வாக்கு செலுத்துவேன் என்று இல்லாமல் நல்லவர்களுக்கு வாக்களிக்கலாம்" என்றார்.

Read More : ’சொந்த மகளா இருந்தாலும் பிரச்சாரம் செய்ய முடியாது’..!! வீரப்பன் மனைவி சொன்ன பதில்..!!

Advertisement