முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”என்னை வெற்றி பெற வைத்தால் திருமணமாகாத இளைஞர்களுக்கு திருமணம்”..!! கவனம் ஈர்த்த வேட்பாளரின் வாக்குறுதி..!!

A candidate contesting the Maharashtra state elections has promised to 'marry unmarried youth at my expense if you vote for me.'
08:18 AM Nov 09, 2024 IST | Chella
Advertisement

மகாராஷ்டிரா மாநில தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், "எனக்கு வாக்களித்தால் திருமணமாகாத இளைஞர்களுக்கு எனது செலவில் திருமணம் செய்து வைப்பேன்" என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்.

Advertisement

மகாராஷ்டிரா மாநிலத்தில் நவம்பர் 20ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பார்லி என்ற தொகுதியில் போட்டியிடும் ராஜே சாகேப் தேஷ்முக் என்பவர் புதுவிதமான வாக்குறுதிகளை வாக்காளர்களுக்கு அளித்துள்ளார். கிராமப்புறங்களில் திருமண வயது கொண்ட ஆண்களுக்கு மணமகள் கிடைக்கவில்லை என்ற பிரச்சனையை முன்வைத்து அவர் பேசியுள்ளார்.

"நான் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு எனது செலவில் திருமணம் செய்து வைப்பேன். அதுமட்டுமின்றி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி கொடுப்பேன்" என அவர் வாக்குறுதி கொடுத்துள்ளார். "திருமணம் செய்ய விரும்பும் ஆணுக்கு வேலை உள்ளதா? சம்பாத்தியம் உள்ளதா? என்று மணமகள் வீட்டார் கேட்கின்றனர்.

எனவே, முதலில் அந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துவிட்டு, அதன் பின்னர் அவர்களுக்கு எனது செலவிலேயே திருமணம் செய்து வைப்பேன்" என்று அவர் வாக்குறுதி அளித்துள்ளார். அவருடைய இந்த வாக்குறுதி அந்த தொகுதி மக்கள், குறிப்பாக இளைஞர்களிடம் கவனத்தை பெற்றுள்ளது.

Read More : ஆதார் ஆணையத்தில் வேலைவாய்ப்பு..!! இந்த கல்வித் தகுதி இருந்தால் உடனே விண்ணப்பிக்கலாம்..!!

Tags :
திருமணம்தேர்தல் வாக்குறுதிமகாராஷ்டிர மாநிலம்வேட்பாளர்
Advertisement
Next Article