தோற்றால் EVM மிஷினில் மோசடி என்பீர்கள்!. ஜெயித்தால் இல்லை என்பீர்களா?. உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
Court: பழைய ஓட்டுச்சீட்டு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் தேர்தல் முறையில் வாக்குச் சீட்டுகளுக்கு பதிலாக மின்னணு வாக்குப்பெட்டி எந்திரங்கள் (இவிஎம்) நடைமுறைக்கு வந்தது. வாக்குச்சீட்டு முறையில் வாக்கு எண்ணிக்கை பலமணி நேரம் ஆனதை தொடர்ந்து இந்த எந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தது. எனினும் இவிஎம் எந்திரம் என்பது மின்னணு கொண்டு இயங்கும் என்பதால் அவற்றை ஹேக் செய்ய வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இவிஎம் எந்திரங்களுக்கு பதிலாக பழைய வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணையில் உள்ளன. முன்னதாக, உலக பணக்காரரான எலான் மஸ்க், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மிகவும் ஆபத்தான ஒன்று என கூறி இருந்தார். இதற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில், EVM மிஷினில் மிகப்பெரிய மோசடி நடைபெறுவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது.அதில், பழைய வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், நீங்கள் தோற்றால் EVM மிஷினில் மோசடி என்பீர்கள்!. ஜெயித்தால் இல்லை என்பீர்களா? என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து, இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Readmore: ஒரே நாடு ஒரே சந்தா திட்டத்திற்கு ஒப்புதல்!. 2 கோடி இந்தியர்கள் பயன்பெறுவர்!. மத்திய அரசு அதிரடி!