ஒரு மணி நேர தூக்கத்தை இழந்தால் உங்களுக்கு இந்த பிரச்சனைகள் வரும்..!! எச்சரிக்கும் நிபுணர்கள்..!!
தூக்கம் என்பது மனிதனின் அன்றாட அவசியத் தேவை. ஒரு நாளைக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்கிறார்கள் நிபுணர்கள். உடல் உறுப்புக்கள் சீராக இயங்கவும், சுறுசுறுப்பாக இருக்கவும் நல்ல ஆழ்ந்த தூக்கம் வேண்டும். சிலர் படுத்தவுடன் தூங்கிவிடுவதெல்லாம் உண்மையில் வரம்தான். சிலர் நாள் முழுவதும் உழைத்துத் களைத்துத் வந்தாலும் தூக்கம் வராது. தூங்காமல் இருப்பது உடலின் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இந்நிலையில், தூக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ஹைதராபாத் நரம்பியல் மருத்துவ நிபுணர் சுதிர் குமார் என்பவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு மணிநேர தூக்கத்தை இழந்தால், அது முழுமையாக குணமடைய நான்கு நாட்கள் தேவைப்படும். போதுமான தூக்கம் இல்லை என்றால் தலைவலி, அதிகரித்த எரிச்சல், மோசமான முடிவெடுப்பது மற்றும் கவனமின்மை போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுத்தும்” என்று பதிவிட்டுள்ளார்.
Read More : தமிழ்நாட்டில் தீவிரமடையும் டெங்கு..!! அறிகுறிகள் இதுதான்..!! எச்சரிக்கும் பொது சுகாதாரத்துறை..!!