For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தொடர்ந்து காலை உணவை தவிர்க்கும் நபரா..? அப்போ உங்கள் மூளைக்கு நீங்க துரோகம் செய்றீங்க.!

06:11 AM Nov 24, 2023 IST | 1newsnationuser4
தொடர்ந்து காலை உணவை தவிர்க்கும் நபரா    அப்போ உங்கள் மூளைக்கு நீங்க துரோகம் செய்றீங்க
Advertisement

உடலின் செயல்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தி இயக்கும் கட்டுப்பாட்டகமாக மனித மூளை செயல்பட்டு வருகிறது . மனித மூளை தான் உடலின் அனைத்து உறுப்புகளும் இயங்குவதற்கான சிக்னல்களை கொடுக்கிறது. இதன் அடிப்படையிலேயே அனைத்து உறுப்புகளும் இயங்குகின்றன. எனவே நமது மூலையில் ஏற்படும் ஒரு சிறிய பாதிப்பும் உடலின் இயக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

Advertisement

மனித மூளை சுறுசுறுப்பாக இயங்குவதற்கு ஆற்றல் தேவை. இந்த ஆற்றல் நம் உணவின் மூலமாகவே பெறப்படுகிறது. அதிலும் தூக்கத்திற்கு பின் காலை உணவு மூளையின் செயல்பாட்டிற்கு முக்கியமான ஒன்றாகும். காலை உணவை தவிர்ப்பது மூளையின் செயல்பாட்டை கடுமையாக பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். காலை உணவை தவிர்ப்பதால் மூளையின் செயல்பாடு மாறிவிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர் .

மேலும் புகைபிடிக்கும் பழக்கமும் மூளையின் செயலை பாதிக்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். ஒருவர் தொடர்ந்து புகை பிடித்து வருவதால் அவரது மூளை அந்த பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறது. இதனால் அவர் புகை பிடிக்காத போது அவரால் இயல்பான செயல்களை செய்ய முடிவதில்லை. இதற்குக் காரணம் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அவரது மூளை அடிமையாக இருப்பதே ஆகும். இந்த பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதால் புகை பிடிக்காத நேரங்களில் அவருக்கு மறதி ஏற்படலாம் அல்லது பதற்றமாக உணரலாம்.

மேலும் மூளையின் சுறுசுறுப்பான செயல்பாட்டிற்கு தூக்கம் மிக முக்கிய காரணியாகும். இரவு நேர தூக்கம் இல்லாதவர்களும் மனக்குழப்பம் மற்றும் மன அழுத்த பிரச்சனைகளுக்கு உள்ளாகின்றனர். மேலும் இவர்களது மூளையின் செயல் திறனும் குறைகிறது. இதனால் இரவு நீண்ட நேரம் கண்விழித்து செல்போன் மற்றும் திரைப்படங்களை பார்க்காமல் குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் வரை கட்டாய தூக்கம் அவசியம் என அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.

Tags :
Advertisement