தினமும் ரூ.42 முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.10,000 கிடைக்கும்..!! மத்திய அரசின் அசத்தல் திட்டம்..!! தம்பதிகளே மிஸ் பண்ணிடாதீங்க..!!
மத்திய - மாநில அரசுகள் பொதுமக்களின் நன்மைக்காக ஏராளமான நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகின்றன. இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில், கடந்த 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா (Atal Pension Yojana – APY) திட்டம். இந்த திட்டம் ஒழுங்கமைக்கப்படாத துறையில் உள்ள வயதான நபர்கள் முதல் தொழிலாளர்கள் வரை அனைவருக்கும் பொருளாதார பாதுகாப்பு வழங்குகிறது.
அவர்களுக்கு குறைந்தபட்ச பென்ஷன் தொகையை உறுதி செய்திகிறது. ஒவ்வொரு இந்தியருக்கும் தங்களது ஓய்வு காலத்திற்குப் பிறகு நிலையான வருமானத்தை உறுதி செய்கிறது. மத்திய அரசின் இந்த “அடல் பென்ஷன் யோஜனா” திட்டத்தில், தற்போது வரை 7 கோடிக்கும் அதிகமானோர் பயனடைந்து வருகின்றனர். 2024-25ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 58 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புதிய கணக்குகளை தொடங்கியிருக்கின்றன.
முதலீடு செய்வது எப்படி..?
மத்திய அரசின் இந்த “அடல் பென்ஷன் யோஜனா” திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 20 ஆண்டுகள் ஆகும். இப்போது நீங்கள் நாள் ஒன்றுக்கு ரூ.7 என்ற கணக்கில் பணத்தை சேமிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படி சேர்த்தால், ஒரு மாதத்திற்கு ரூ.210 கிடைக்கும். அந்த பணத்தை அதை அடல் பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்தால், 20 ஆண்டு முதிர்வு காலத்திற்கு பிறகு, உங்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 வருமானம் கிடைக்கும்.
அதேபோல், தினசரி ரூ.42 சேமித்து முதலீடு செய்கிறீர்கள் என்றால், 20 ஆண்டுகள் முதிர்வு காலத்திற்கு பிறகு உங்களுக்கு மாதந்தோறும் ரூ.10,000 நிலையான வருமானம் கிடைக்கிறது என்றால், முதிர்வு காலத்திற்கு பின் மாதந்தோறும் ரூ.10,000 கிடைக்கும். மேலும், இந்த திட்டத்தில், தம்பதிகளாக சேர்ந்து முதலீடு செய்யும் பட்சத்தில், அதிக லாபத்தை நீங்கள் பெறலாம்.