உங்கள் பெண் குழந்தையை லட்சாதிபதி ஆக்கும் திட்டம்..!! பெற்றோர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் யார் யார் வரிச்சலுகைகளை பெறலாம்..? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா என்கிற செல்வமகள் சேமிப்பு திட்டமானது, பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டம் ஆகும். வெறும் ரூ.250 அல்லது நீங்கள் விரும்பும் தொகையை செலுத்தி, இந்த கணக்கை துவங்கலாம். மாதந்தோறும் செலுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு வருடத்துக்கு மொத்தமாகவும் செலுத்திக் கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு வருடத்தில் ரூ.1.5 லட்சம் வரை செலுத்தலாம். சேமிப்புக் கணக்கிற்கு முதிர்வு என்பது, கணக்கு தொடங்கப்பட்ட அன்றிலிருந்து 21 வருடங்களில் முடிவு பெறும்.
பெண் குழந்தை 18 வயதை எட்டும்போது அவர்களுடைய கல்வி செலவுக்கு இந்த முதலீட்டிலிருந்து பாதி தொகையை எடுத்துக் கொள்ளலாம். குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் சேரலாம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகளை மட்டுமே இணைக்க முடியும். இரட்டை குழந்தைகள் அல்லது ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் என்றால், அவர்களுக்கென்றே விதி விலக்கு உண்டு. குறைந்தபட்ச முதலீட்டு தொகை 250 ரூபாயாகும்.
கடந்த 2022-23இல் மட்டும் நம்முடைய தமிழ்நாட்டில் 32.57 லட்சம் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தை இந்த திட்டம் பிடித்திருக்கிறது. முதலீடு மற்றும் வட்டிக்கு 100% பாதுகாப்பு என்பதுடன், அதிக வட்டி கிடைக்கிறது என்பதால், இந்த திட்டத்திற்கு பெரும் ஆதரவு இருக்கிறது. உங்கள் மகளுக்கு ரூ.70 லட்சம் கார்பஸ் தொகையை நீங்கள் இலக்காக வைத்திருக்கிறீர்கள் என்றால், மாதம் ரூ.12,500 அல்லது ஒரு நிதியாண்டில் ரூ.1,50,000 முதலீடு செய்ய வேண்டும். அப்படியானால் 15 வருடங்களில் உங்கள் மொத்த முதலீடு ரூ.22,50,000 ஆக இருக்கும். 8.20 சதவீத வட்டி விகிதத்தில் உங்களுக்கு ரூ.46,77,578 வருமானமும் கிடைக்கும். மொத்தத்தில் முதிர்ச்சியின்போது ரூ.69,27,578 அதாவது கிட்டத்தட்ட ரூ.70 லட்சம் பெறுவீர்கள்.
செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் குழந்தையின் பெற்றோர்கள் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். எனவே, இதில் கணவன்,மனைவி இருவரில் ஒருவர் இந்த முதலீட்டுக்கான வரிச்சலுகையை பெற முடியும். காரணம், மனைவி தன்னுடைய வங்கி கணக்கு மூலமாக குழந்தையின் பெயரில் செல்வ மகள் திட்டத்தில் முதலீடு செய்தால், அந்த முதலீட்டுக்கான வரி சலுகையை கணவன், மனைவி இருவரில் யார் வேண்டுமானாலும் பெறலாம். செல்வ மகள் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு குழந்தையின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் வரி விலக்கு பெறலாம்.
குழந்தையின் தந்தை கணக்கை திறந்தாலும், தாய் (பெற்றோர்) திட்டத்தில் பங்களித்தால் சுகன்யா சம்ரிதி யோஜனா வரிச் சலுகைகளைப் பெறலாம். ஆனால், குழந்தையின் தாத்தா பாட்டி திட்டத்தில் முதலீடு செய்தாலும், அவர்கள் வரிச் சலுகையைப் பெற முடியாது. அதுமட்டுமின்றி, முதலீடு செய்யப்படும் தொகையானது, முதலீட்டின் மீது கிடைக்கும் வட்டி, முதிர்வு தொகை என அனைத்துக்குமே இந்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வரி விலக்கு உண்டு.
Read More : ’விஜய்யே வெளிய போக சொன்னாலும் நான் போக மாட்டேன்’..!! பக்கபலமா இருப்பேன்..!! 2026 தேர்தலில் போட்டி..!!