"ஆவாரை பூத்திருக்க, சாவாரை கண்டதுண்டோ"..!! இந்த ஒரு பூ போதும்..!! இதில் இல்லாத மருத்துவ குணங்களே இல்லை..!!
சர்க்கரை நோய், தோல் வியாதிகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களை தடுக்கும் அற்புத மூலிகையாக ஆவாரை திகழ்கிறது. இதில், அடங்கியுள்ள மருத்துவ குணங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
"ஆவாரை பூத்திருக்க, சாவாரை கண்டதுண்டோ" என்ற பழமொழிக்கு ஏற்ப எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டது இந்த ஆவாரை மூலிகை செடி. போகிப்பண்டிகை நாளில் ஆவாரம்பூ, சிறுபீளை, வேப்பிலை, தும்பை, மாவிலை வைத்து காப்பு கட்டுவோம், அது நம்மை நோயில் இருந்து காப்பதாக தமிழர்களின் ஐதீகமாக உள்ளது.
சித்த மருத்துவத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆவாரம்பூ, சர்க்கரை ரத்தத்தில் தேங்காமல் அவற்றை செல்லுக்குள் அனுப்புவதற்கான நொதியை தூண்டிவிடும் ஆற்றல் கொண்டது. இவற்றை கசாயம், பால் கலக்காத தேநீர், பவுடர் மற்றும் ஆவாரைக் குடிநீராகவும் பயன்படுத்தலாம். இதன் மூலம் சர்க்கரையின் அளவு வெகுவாய் கட்டுப்படும். இதுமட்டுமல்லாது மூட்டுவலி, அதிக தாகம், நரம்புத்தளர்ச்சி போன்றவற்றிற்கும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஆவாரையின் இலை, பட்டை, பூ, வேர், பிசின் இப்படி அனைத்திலும் மருத்துவ குணம் உள்ளது.
ஆவாரம் பூ தங்கச்சத்துள்ளது என்பதால், தங்கத்திற்கு சமமாக கருதப்படுகிறது. முகம் பொழிவு பெற காய்ந்த ஆவாரம் பூ பொடியை சிறதளவு எடுத்து பசுந்தயிரில் போட்டு அரைத்து முகத்திற்கு பூசி, சிறிது நேரம் கழித்து கழுவிவந்தால் முகத்தில் இருக்கும் வடுக்கல், எண்ணெய் தன்மை நீங்கி முகம் பொழிவு பெரும்.
Read More : ஆளுநர் விவகாரத்தில் சீறிப்பாய்ந்த அண்ணாமலை..!! ஆதாரத்துடன் வெளியிடப்பட்ட பரபரப்பு அறிக்கை..!!