உங்களிடம் Fastag இருந்தா KYC-யை ஜனவரி 31-க்குள் அப்டேட் செய்ய வேண்டும்...! இல்லை என்றால் சிக்கல்...
உங்கள் வாகனத்தில் Fastag இருந்தால், அதன் KYC விதிமுறையை ஜனவரி 31க்குள் அப்டேட் செய்ய வேண்டும். மின்னணு கட்டண வசூல் அமைப்பின் செயல்திறனை அதிகரிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஜனவரி 31 க்குப் பிறகு, KYC விதிகளை நிறைவேற்றாத ஃபாஸ்டேக்குகள் வங்கிகளால் செயலிழக்கப்படும் அல்லது தடைப் பட்டியலில் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், FASTag இல்லாமல், நீங்கள் டோலுக்கு இரட்டை வரி செலுத்த வேண்டியிருக்கும்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) வெளியிட்ட அறிக்கையில் செயல்முறையுடன் கூடிய FASTagகள் இந்த மாதம் 31ஆம் தேதிக்குப் பிறகு செயலிழக்கப்படும் அல்லது தடுப்புப்பட்டியலில் சேர்க்கப்படும். ரிசர்வ் வங்கியின் ஆணையை மீறி, ஒரு குறிப்பிட்ட வாகனத்திற்கு பல FASTag-க்குகள் வழங்கப்பட்டதாகவும், KYC இல்லாமல் FASTags வழங்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பல வாகனங்களுக்கு ஒற்றை FASTagஐ பயன்படுத்துதல் அல்லது ஒரு குறிப்பிட்ட வாகனத்துடன் பல FASTagகளை இணைப்பது போன்ற பயனர் நடத்தையை ஊக்கப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். அந்தந்த வங்கிகள் மூலம் முன்னர் வழங்கப்பட்ட அனைத்து FASTagகளையும் நிராகரிக்க வேண்டும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்காக FASTag பயனர்கள் அருகிலுள்ள டோல் பிளாசாக்களை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.