”என்னை பேச அனுமதித்திருந்தால் கிழி கிழியென்று கிழித்திருப்பேன்"..!! எடப்பாடி பழனிசாமி காட்டம்..!!
"சட்டப்பேரவையில் என்னை பேச அனுமதித்து இருந்தால், நான் கிழி கிழியென்று கிழித்திருப்பேன்" என உண்ணாவிரதப் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கள்ளக்குறிச்சி சம்பவம் பற்றி சட்டப்பேரவையில் விவாதிக்க கோரி அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், இதனை கண்டித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு அளித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நன்றி. கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்திற்கு திமுக அரசே காரணம். மக்கள் பிரச்சனையை பற்றி பேசுவதற்கு தான் சட்டசபை உள்ளது. ஆனால், அதிமுகவினரை வேண்டுமென்றே வெளியேற்றிவிட்டு முதல்வர் பதில் அளிக்கிறார். கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றி பேச கோரினால் எங்களை சபையில் இருந்து வெளியேற்றிவிட்டனர்.
எதிர்க்கட்சிகளை பேசவிட்டு பிரச்சனைகளை அணுகுவது தான் நல்ல அரசுக்கு அழகு. ஆனால், எங்களை வெளியேற்றிவிட்டு அதற்கு பிறகு முதல்வர் 15 நிமிடம் பேசுகிறார். அச்சம் என்பது எங்களது அகராதியிலேயே கிடையாது. மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தொடங்கப்பட்ட கட்சி அதிமுக. எந்த காலக்கட்டத்திலும் யாருக்கும் அஞ்சியதும் கிடையாது. ஓடி ஒளிந்ததும் கிடையாது. மேடையில் அமைச்சர் ஒருவர் பேசுகிறார், எதிர்க்கட்சி தலைவர் உள்ளே இருந்தால் கிழி கிழியென்று கிழித்துவிடுவோம் என்று.. பேப்பரை வேண்டுமென்றால் கிழிக்கலாம். நான் எந்த அளவில் எப்படி பேசுவேன் என்பது எல்லாருக்கும் தெரியும்.
நான் பேசுவதை எல்லாம் சட்டப்பேரவையில் நேரலையில் ஒளிபரப்பு செய்து இருந்தால் நான் கிழி கிழியென்று கிழித்திருப்பேன். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக அறவழியில் போராட்டம் செய்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் கள்ளக்குறிச்சியே கண்ணீரில் மிதக்கிறது. தமிழ்நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. இன்றைக்கு 40க்கு 40 வெற்றி பெற்றுவிட்டோம் என்பதாலும், அனைத்திலும் அதிமுக தோல்வியடைந்துவிட்டதால் இப்படி பொறாமையில் வெளிநடப்பு செய்வதாக சொன்னார். இதே திமுக ஒரு கட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் இருந்ததை மறந்துவிட வேண்டாம். அதிகாரம் எங்கள் கைக்கும் வரும். அப்போது மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுக படுதோல்வி அடையும்” என்று கூறினார்.
Read More : பட்டப்பகலில் நடுரோட்டில் நிர்வாணமாக நடந்து சென்ற பெண்..!! என்ன காரணம்..? தீயாய் பரவும் வீடியோ..!!