தினமும் இதை மட்டும் சாப்பிட்டு வந்தால் உங்களை அந்த விஷயத்தில் அடிச்சிக்கவே முடியாது..!! டிரை பண்ணி பாருங்க..!!
பிஸ்தாவை தினந்தோறும் எடுத்துக் கொள்வது பாலுணர்வை தூண்டும் என்றும், ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கைக்கு உதவும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
மிகவும் விலை உயர்ந்த பருப்புகளில் ஒன்றான பிஸ்தாவை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தி, ஆண்மை அதிகரிக்கும் என சமூகவலைதளங்களில் பலரும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை காண முடிகிறது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள உடற்பயிற்சி நிபுணர் தருண்தீப் சிங் ரெக்கி, ”பிஸ்தா ஒட்டுமொத்த வாழ்வுக்கும் மிகவும் நன்மை தரக்கூடியது. துத்தநாகம், வைட்டமின் ஈ, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், புரதம் மற்றும் நார்ச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துகளால் நிரம்பியுள்ள பிஸ்தா, தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக தெரிவித்தார்.
பிஸ்தாவில் 40% அளவுக்கு புரதம் இருப்பதால், ஆரோக்கியமான முடி வளர்ச்சி மற்றும் சரும பாதுகாப்புக்கு முக்கியமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். அத்துடன், ஆண்களின் பாலுணர்வை தூண்டவும், ஆரோக்கியமான தாம்பத்தியத்திற்கும் பிஸ்தா உதவி புரிவதாக மருத்துவர் மஹேத்வி என்பவர் கூறியுள்ளார். பிஸ்தாவை சாப்பிடுவதால், பாலுணர்வு மேம்படும் என்பதை பல ஆய்வு முடிவுகள் தெரிவித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பிஸ்தா சாப்பிடும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது என்றும், அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வது எதிர்மறையான விளைவுகளை கொடுக்கும் என்றும் எச்சரிக்கிறார். எனவே, நாளொன்றுக்கு 1 அவுன்ஸ் அல்லது ஒரு கைப்பிடி அளவு மட்டுமே பிஸ்தாவை எடுத்துக் கொள்வது சரியாக இருக்கும் என்பதும் அவரின் கருத்து.