Aadhar: இதை செய்யவில்லை என்றால்... உங்க ஆதார் அட்டை செல்லாமல் போய்விடும்...!
UIDAI இணையத்தை பயன்படுத்தி ஆதார் அட்டையைப் புதுப்பிப்பதற்கான கடைசி தேதியை இந்திய அரசு நீட்டித்துள்ளது. இப்போது குடிமக்கள் 14 ஜூன் 2024 வரை ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிக்கலாம். இந்தியாவில் ஆதார் அட்டை மிகவும் அத்தியாவசியமான ஆவணமாகும், இது தனிப்பட்ட அடையாளம் உட்பட பல நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
My Aadhaar இணையதளத்தை பயன்படுத்தி, குடிமக்களுக்கு ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிக்கும் வசதியை அரசு வழங்கியுள்ளது. ஆதார் அட்டை தகவலைப் புதுப்பிக்க குடிமக்களிடம் எந்த ஒரு கட்டணத்தையும் இணையதளம் வசூலிப்பதில்லை. எனவே நீங்கள் இதுவரை உங்கள் ஆதார் அட்டையைப் புதுப்பிக்கவில்லை என்றால், 14 ஜூன் 2024 வரை உங்கள் ஆதார் தகவலை இலவசமாகப் புதுப்பிக்கலாம்.
புதிய ஆதார் அட்டையை வழங்குதல் அல்லது ஆதார் தகவல் மற்றும் பிற தொடர்புடைய சேவைகளை புதுப்பித்தல் உள்ளிட்ட ஆதார் அட்டை வசதிகளை UIDAI நிர்வகிக்கிறது. ஏற்கனவே ஆதார் அட்டை வைத்திருக்கும் மற்றும் ஆதார் புதுப்பிக்க சேவை மையத்திற்குச் செல்லாமல் இணையதளம் வாய்களாகவே புதுப்பித்துக் கொள்ளலாம்.
ஆதார் அட்டை இலவசமாக புதுப்பிக்க கடைசி தேதி முன்னதாக 15 டிசம்பர் 2023 ஆக இருந்தது, ஆனால் இப்போது UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு அறிவிப்பைப் பதிவேற்றியுள்ளது. அதில் கடைசி தேதியை 14 ஜூன் 2024 வரை நீட்டித்துள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் உங்கள் ஆதார் அட்டை செல்லாதாகிவிடும்.