For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இன்று சித்ரா பௌர்ணமி…! இப்படி வழிபாடு செய்து பாருங்க…!

06:48 AM Apr 23, 2024 IST | Baskar
இன்று சித்ரா பௌர்ணமி…  இப்படி வழிபாடு செய்து பாருங்க…
Advertisement

சித்ரா பெளர்ணமி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்ல தமிழ்நாடு அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. சித்ரா பெளர்ணமி என்றால் என்ன? அதன் சிறப்புகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Advertisement

தமிழ் ஆண்டின் முதல் மாதமான சித்திரையில் வரும் பெளர்ணமி சித்ரா பௌர்ணமி. மனிதராக பிறந்த அனைவரின் செயல்களையும் சித்ர குப்தன் தான் கணக்கு வைத்துக் கொள்வார் என்பது நம்பிக்கை. சித்திரை மாதம் வரும் பெளர்ணமி சித்ரகுபத்தனை வணங்கும் நாள். மதுரையில் மிகவும் சிறப்பாக அனுசரிக்கப்படும். சித்ரா பௌர்ணமியன்று மதுரை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு அருள் புரியும் வைபவம் நடக்கிறது.

சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள், சித்ரா பெளர்ணமி அன்று சித்ரகுப்தனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவார்கள். மேலும் சித்ரா பௌர்ணமி அன்று அம்பாள் வழிபாடு செய்வதால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்துடன் கூடிய சித்ரா பௌர்ணமி வந்தால் மிகவும் விசேஷமானது.

மேலும் இந்த தினத்தில் அனைத்து சிவாலயங்களிலும் மிகவும் விசேஷமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அதே போன்று வைணவ கோயில்கள் மற்றும் இதர தெய்வங்களின் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள், விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

சித்ரா பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் வந்து இறைவனை வழிபட்டு உங்களால் முடிந்த தானம், தர்மங்கள் செய்வதால் உங்களுக்கு அனைத்து வித நன்மைகளும், சுபிட்சங்களும் ஏற்படும். இந்த சித்ரா பௌர்ணமி தினத்தன்று சித்திரகுப்தனை வழிபடுவதால் நீண்ட ஆயுளும், நோய்நொடி இல்லாத வாழ்வும் பக்தர்கள் கிடைக்கப்பெறுவார்கள்.இந்த சித்ரா பவுர்ணமி தினத்தன்று பக்தர்களுக்கு தானம் செய்தால் உங்களுக்கு மிகுந்த புண்ணியத்தை பெற்றுத்தரும்.

இந்த சித்ரா பௌர்ணமி தினத்தில் வீட்டில் வழிபாடு செய்வதுடன் ஆலயங்களில் சென்று வழிபடுவதும் மிக அவசியம். இந்த நாளில் கோயில்களின் சக்தி அதிகரிப்பதாகவும் தெய்வங்களின் வீரியம் வீறுகொண்டு வெளிப்படுவதாகவும் ஐதீகம். இந்த நாளில் ஆலயம் சென்று வணங்கினால், நம் பிரார்த்தனைகள் கண்டிப்பாக நிறைவேறும் என கூறப்படுகின்றது. கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் தங்கள் வீட்டு பூஜை அறையையே கோயிலாக கருதி பிரார்த்தனை செய்யலாம்.

அதிகாலையில் குளித்து பூஜை அறையில் விளக்கேற்றி, தெய்வங்களின் படங்களுக்கு பூ சூட்டி, சர்க்கரை பொங்கல், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் போன்ற கலந்த சாதங்களை நெய்வேத்தியம் செய்து வணங்க வேண்டும். மற்ற நாட்களைவிட, ஆக்கப்பூர்வமான அதிர்வலைகள் அதிகம் இருக்கும் சித்ரா பெளர்ணமியன்று வீட்டில் செய்யப்படும் பூஜைக்கு, பலமடங்கும் வீரியம் இருக்கும், இன்று செய்யப்படும் பூஜையின் பலனும் பன்மடங்காக இருக்கும். எனவே பூஜை செய்து நன்மையை பெற்றுக்கொள்ளுங்கள்.

Read More: 2 மணிநேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த தலைவர் 171 டைட்டில்

Advertisement