வேகமாக அதிகரிக்கும் கேன்சர் பாதிப்பு.. ஆனா இதை செய்தால்.. புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கலாம்..!
இந்தியாவில் புற்றுநோயின் தாக்கம் சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய்த் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் (NCDIR) அறிக்கையின்படி, 2020 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது, 2025 ஆம் ஆண்டில் புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை 12.8% ஆக இருக்கும், அந்த ஆண்டில் மொத்தம் 1,392,179 புற்றுநோய் நோயாளிகள் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது..
2025 க்குள் புற்றுநோய் பாதிப்பு 12.8% அதிகரிக்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. "2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் புதிய புற்றுநோய்களின் எண்ணிக்கை 1,461,427 ஆக இருந்தது. பாதிப்பு விகிதம் 100,000 நபர்களுக்கு 100.4 ஆகும். இந்தியாவில் தோராயமாக 9 பேரில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் புற்றுநோயைக் கண்டறிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. அதே சமயம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகளவில் ஏற்படுகிறது. 2020 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டளவில் 12.8% புற்றுநோயின் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க உங்கள் அன்றாட வாழ்க்கையில் நீங்கள் இணைக்கக்கூடிய சில வாழ்க்கை முறை குறிப்புகள் குறித்து பார்க்கலாம்..
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க அத்தியாவசிய வாழ்க்கை முறை குறிப்புகள்
ஆரோக்கிய உணவுமுறை : ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவு அவசியம். பதப்படுத்தப்பட்ட இறைச்சியைத் தவிர்த்து, உங்கள் அன்றாட உணவில் அதிக காய்கறிகள் மற்றும் கீரைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். தண்ணீர், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஜூஸ் போன்ற அதிக திரவங்களை குடிக்கவும்.
புகைபிடித்தல் அல்லது புகையிலையை தவிர்க்கவும்: புகையிலை உண்பது வாய், தொண்டை, கணையம் போன்ற புற்றுநோய்களை ஏற்படுத்தும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே புகைபிடித்தல், புகையிலை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
சுறுசுறுப்பாக இருங்கள்: இன்றைய உட்கார்ந்த வாழ்க்கை முறையில், உடல் செயல்பாடுகள் மிகவும் முக்கியம். சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை வளர்த்துக் கொள்ள முயற்சிக்கவும். ஆராய்ச்சியின் படி, ஆரோக்கியமாக இருப்பது மற்றும் ஆரோக்கியமான எடையை பராமரிப்பது புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். தினமும் 30 நிமிடங்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி, ரன்னிங், ஜாகிங் என ஏதேனும் ஒரு உடல் செயல்பாட்டில் ஈடுபடலாம்.
நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்கவும்: கடுமையான சூரிய ஒளியில் அதிகமாக வெளிப்படுவது தோல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். வெயில் காலங்களில் தவறாமல் சன்ஸ்கிரீன் பயன்படுத்தவும்.
Read More : உஷார்!. பாராசிட்டமால் எடுத்துக்கொள்வதே மாரடைப்பு, சிறுநீரக பாதிப்புக்கு காரணம்!. ஆய்வில் அதிர்ச்சி!