சேமிப்பு கணக்கில் அதிக தொகையை டெபாசிட் செய்தால் ஆப்பு தேடி வரும்..!! இந்த விதிகளை தெரிஞ்சிக்கோங்க..!!
சேமிப்பு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒவ்வொருவரும் சில விஷயங்கள் பற்றி கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒரு நிதியாண்டில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யலாம்? எவ்வளவு எடுக்கலாம்? என்பது குறித்து அறிந்து வைத்திருக்க வேண்டும். வருமான வரிச் சட்டத்தின் விதிகளின்படி, ஒரு தனிநபரின் சேமிப்புக் கணக்குகளில் ஒரே நிதியாண்டில் ரூ.10 லட்சத்தை தாண்டினால், ஐடி துறையின் கவனத்திற்கு வங்கிகள் எடுத்துச் செல்ல வேண்டும்.
உங்கள் பரிவர்த்தனைகளில் வரி துறைக்கு சந்தேகம் இருந்தால், அவர்கள் நோட்டீஸ் அனுப்புவார்கள். அப்போது, பணம் எங்கிருந்து வந்தது என்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். எனவே, சேமிப்பு கணக்கில் அதிக தொகையை டெபாசிட் செய்பவர்கள் வருமான ஆதாரங்களையும் காட்ட தயாராக இருக்க வேண்டும். இருப்பினும், இந்த விதிமுறை தனிப்பட்ட சேமிப்புக் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நடப்புக் கணக்கு அல்லது வணிகக் கணக்குகளுக்கு வரம்பு அதிகமாக உள்ளது. மேலும் ஒரு நபரிடம் இருந்து ஒரு நாளில் ரூ.2 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக எடுக்க வேண்டாம். இந்த ஏற்பாடு ஒரு நாள் அல்லது ஒரு பரிவர்த்தனைக்கு பொருந்தும். ஒரே நாளில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் பரிவர்த்தனை இருந்தால், அதை ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு மாற்றிக் கொள்ளலாம்.
வருமான வரிச் சட்டப் பிரிவுப்படி, வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் குறிப்பிட்ட வரம்புகளைத் தாண்டிய பரிவர்த்தனைகள் தொடர்பான தகவல்களை ஐடி கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். ஒருநாளைக்கு ரூ.50,000-க்கும் மேல் டெபாசிட் செய்ய விரும்பினால், பான் கார்டை இணைக்க வேண்டும். பான் கார்டு இல்லை என்றால் படிவம் 60/61ஐ சமர்ப்பிக்க வேண்டும்.
நோட்டீஸ் வந்தால் என்ன செய்வது..? சேமிப்புக் கணக்குகளில் டெபாசிட் வரம்பான 10 லட்சம் ரூபாயை தாண்டும் போது, வருமானவரி துறையிடமிருந்து நோட்டீஸ் வந்தால், உரிய ஆதாரங்களைக் காட்ட வேண்டும். பணம் எங்கிருந்து வந்தது என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். இதற்கு வரி ஆலோசகர்களை கலந்தாலோசிப்பது நல்லது. அதன்பிறகு கவலைப்படத் தேவையில்லை. எனவே, சேமிப்புக் கணக்குகளில் வைப்புத்தொகை மற்றும் திரும்பப் பெறுதல் வரம்பை மீறாமல் இருப்பதை உறுதி செய்தால், சாதாரண குடிமக்கள் எந்த சிரமத்தையும் சந்திக்க வேண்டியதில்லை. ஆனால், இந்த விதிகள் பண டெபாசிட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு வரம்புகள் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.