முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பாஜகவுக்கு ஒரு வாக்கு அளித்தால் 2 வாக்குகள் பதிவு ; மாதிரி வாக்குப்பதிவின் போது பரபரப்பு!!

01:11 PM Apr 18, 2024 IST | Mari Thangam
Advertisement

கேரளாவில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவுக்கு ஒரு வாக்கு அளித்தால், இரண்டு வாக்காக பதிவானதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

கேரளாவில் மொத்தம் 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 26-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், காசர்கோடு தொகுதியில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் இன்பசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த மாதிரி வாக்குப்பதிவின் போது, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்பட்டுள்ள சின்னங்களுக்கு விழும் வாக்குகள் ஆராயப்பட்டது.

அப்போது பாஜகவுக்கு ஒரு வாக்கு அளித்தால், இரண்டு வாக்குகள் பதிவாவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராஜ்மோகன் உன்னி ஆகியோர் குற்றம் சாட்டினர். 20 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 4 இயந்திரங்களில் இந்தக் கோளாறு கண்டறியப்பட்டது.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள நோட்டா உட்பட 10 பொத்தான்களையும் ஒவ்வொரு முறை அழுத்தியபோதும், விவிபாட் இயந்திரத்தில் பாஜகவுக்கு இரண்டு வாக்குகள் பதிவானதாக எதிர்கட்சி வேட்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.

இரண்டு முறை தவறு நேர்ந்த போதும், மூன்றாவது முறை அவை சரி செய்யப்பட்டு அனைத்து இயந்திரங்களும் சரியான முறையில் வேலை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இது போன்ற முறைகேடுகளை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Tags :
Model Voting RegisterParliment election
Advertisement
Next Article