மாலையில் இந்த ஒரு பொருளை பூஜை அறையில் வைத்து வழிபட்டால் பணக்கஷ்டம் நீங்குமாம்..!!
ஜோதிடத்தின் படி, படிகாரம் பணத்தை ஈர்க்கும் என்று சொல்லப்படுகிறது. படிகாரத்தை உங்கள் வீட்டில் பாதுகாப்பாக வைத்தால் பல நன்மைகளை பெறுவீர்கள். அந்த வகையில், படிகாரத்தை உங்கள் வீட்டில் வைத்திருந்தால் பண இழப்பு ஏதும் ஏற்படாது, உங்களுக்கு சாதகமான விளைவுகள் நடக்கும் மற்றும் உங்களுக்கு செல்வத்திற்கு இடையூறான குறைபாடுகள் நீங்கும். அதுமட்டுமின்றி, கிரகத்தால் உங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டால் கூட, படிகாரம் அவற்றை சரி செய்து பணத்தை அதிகரிக்க செய்யும்.
செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமை மாலை பொழுது, படிகாரத்தை ஒரு சுத்தமான சிவப்புத் துணியில் கட்டி அதை உங்கள் வீட்டின் பூஜையில் இருக்கும் லக்ஷ்மி தேவி முன் ஒரு வாரம் அப்படியே வைத்து விடுங்கள். ஒரு வாரம் கழித்து அந்த படிகாரத்தை அதிலிருந்து எடுத்து, பிறகு அதை சிவப்பு ரோஜாக்கள் மேல் வைத்து வீட்டில் பாதுகாப்பாக வைக்கவும். இதை நீங்கள் செய்வதன் மூலம் சில நாட்களிலே அதன் மூலம் உங்கள் வீட்டில் நேர்மறை விளைவுகள் ஏற்படுவதை நீங்கள் காண்பீர்கள்.
இந்த படிகாரத்தை வீட்டில் வைப்பதினால் வாஸ்து தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறைவதுடன் மகிழ்ச்சி மற்றும் அமைதியுடன் செல்வமும் பெருகும். இது தவிர தூங்கும் முன் கறுப்பு துணியில் படிகாரத்தை கட்டி தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கெட்ட கனவுகள் வராது, தெரியாத பயத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என கூறப்படுகிறது.