இந்த தவறுகளை எல்லாம் செய்து கொண்டிருந்தால் வீட்டில் எப்படி பணம் சேரும்..? இதை ஃபாலோ பண்ணுங்க..!!
உங்கள் வீட்டில் வாஸ்து தொடர்பான சில தவறுகளை நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்றால், அது உங்களுக்கு நிறைய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். நீங்கள் கடனில் மூழ்கலாம் அல்லது உங்கள் வீட்டிற்கு வறுமை வரலாம். வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதற்காக மிகவும் கடினமாக உழைக்கும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இதையெல்லாம் மீறி நீங்கள் வாழ்க்கையில் முன்னேறவில்லை என்றால் அதற்கு சில வாஸ்து தவறுகள் காரணம் என்று கூறப்படுகிறது.
அதாவது உங்கள் வீட்டின் பிரதான நுழைவாயிலில் இருள் இருந்தால் அது மிகவும் அசுபமானது. பிரதான நுழைவாயிலில் இருள் சூழ்ந்தால், செய்யும் வேலைகள் கெட்டுப்போகும். எவ்வளவு கடினமாக உழைத்தாலும், வெற்றி பெற முடியாது. மேலும் வாஸ்து சாஸ்திரத்தின்படி, உடைந்த கண்ணாடி அல்லது உடைந்த வேறு எந்தப் பொருளையும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது. அது வீட்டிலிருந்து நேர்மறை ஆற்றலை அகற்றி, எதிர்மறை ஆற்றலைப் பரப்புகிறது.
அதேபோல், கதவுகள் மற்றும் ஜன்னல்களை முழுமையாக திறந்து வைக்க வேண்டாம். இப்படிச் செய்வதால் மனக்கசப்பும், எதிர்மறைச் சக்தியும் வீட்டிற்குள் நுழையலாம். உங்கள் வீட்டின் வடமேற்கு அல்லது மேற்கு மூலையில் துடைப்பத்தை வைக்க வேண்டும். அதே சமயம், தவறுதலாக கூட துடைப்பத்தை வடகிழக்கு அல்லது தென்கிழக்கு திசையிலோ அல்லது பூஜை அறையிலோ வைக்கக் கூடாது. உடைந்த அல்லது பழைய துடைப்பத்தையும் பயன்படுத்த கூடாது.
உடைகள், செருப்புகள், காலணிகள் போன்றவற்றை ஒழுங்காக வைக்காமல் அங்கும் இங்கும் வீசி எறிந்தால், அது மிகவும் தவறு. அவ்வாறு செய்வதால் லட்சுமி தேவிக்கு கோபம் வரும். இதனால் வீட்டில் பணப் பற்றாக்குறை ஏற்படலாம். குழாயை திறந்துவிட்டு ஒருசிலர் அப்படியே மறந்து விட்டுவிடுவார்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, இது அசுபமானது என்று சொல்லலாம். இதனால் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மன ரீதியாகவும் பலவீனமாகலாம். வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்கள் குளியலறை சமையலறைக்கு எதிரே அல்லது அருகில் இருக்கக்கூடாது மற்றும் தெற்கு, தென்கிழக்கு அல்லது தென்மேற்கு திசையில் இருக்கக்கூடாது.