For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா..? குஷ்பு சர்ச்சை பேச்சு...!

05:30 AM Mar 12, 2024 IST | 1newsnationuser2
தாய்மார்களுக்கு ரூ 1000 பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா    குஷ்பு சர்ச்சை பேச்சு
Advertisement

தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சைபோட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா? என குஷ்பு சர்ச்சை பேச்சு.

போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து நேற்று தமிழ்நாடு முழுவதும் பாஜக போராட்டம் நடத்தியது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், போதைப்பொருள் மாபியா விவகாரத்தில் திமுகவின் நிர்வாகிகளே ஈடுபடுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

Advertisement

திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை செங்குன்றத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் மனோகரன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு பங்கேற்றார்.

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்; தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. போதைப்பொருளுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை., ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை. தாய்மார்களின் பிரச்னையை தீர்த்து வைக்கவில்லை. தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சைபோட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா..? என கேள்வி எழுப்பினார்.

Advertisement