முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’இதே நிலை நீடித்தால்’..!! ’ரேஷன் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு’..!! எச்சரிக்கும் அண்ணாமலை..!!

07:14 AM Nov 27, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில்யாத்திரை மேற்கொண்டுள்ளார். அதன்படி, டெல்டா மாவட்டங்களிலும் யாத்திரை மேற்கொண்டார். அப்போது விவசாயிகளை சந்தித்து பேசினார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில்,

Advertisement

கடந்த 2018இல் பிரதமர் மோடி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தார். அதன் பிறகு, கடந்த 5 ஆண்டுகளாக கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்து போது, காவிரி நதி நீர் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் டெல்டா பகுதிக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மேகதாது அணையைக் கட்டுவோம், காவிரி நதி நீர் தர மாட்டோம் என்று கூறி, காவிரி நீர் கிடைக்காமல் நம் கண் முன்னால் நிலங்கள் தரிசு நிலமாக மாறிக் கொண்டிருக்கின்றன.

தஞ்சை, திருவையாறு உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்தான் இந்தியா முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்குச் செல்கிறது. கடந்த 2022 செப்டம்பர் 1 முதல் நவம்பர் 8 ஆம் தேதி வரை, தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசு 8,25,000 டன் நெல்லைக் கொள்முதல் செய்தது. ஆனால், இந்தாண்டு அதே காலகட்டத்தில் 5,25,000 டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. காவிரியில் தண்ணீர் குறைந்த காரணத்தினால், இந்த ஒரு ஆண்டு மட்டும் 3 லட்சம் டன் நெல் மகசூல் குறைந்திருக்கிறது.

தங்கள் நிலத்தைத் தாய்க்குச் சமமாக மதிக்கிறவர்களே டெல்டாக்காரர்கள். விவசாயம் என்றால் என்ன என்று தெரியாத, விவசாயிகள் கஷ்டம் அறியாத முதலமைச்சர் ஸ்டாலின், தன்னை டெல்டாக்காரன் என்று கூறிக் கொள்வது நகைச்சுவை. காவிரியில் நீர் திறக்காமல் டெல்டாவை வஞ்சிக்கும் தங்கள் கூட்டணிக் கட்சி காங்கிரஸை இதுவரை கண்டித்திருப்பாரா? இதே நிலை தொடர்ந்தால், இன்னும் இரண்டு ஆண்டுகளில் ரேஷன் கடைகளில் நம் மக்களுக்கு அரிசி கிடைப்பதே தட்டுப்பாடாகிவிடும்“ என்று தெரிவித்துள்ளார்.

Tags :
அண்ணாமலைதமிழ்நாடு அரசுமுதல்வர் மு.க.ஸ்டாலின்
Advertisement
Next Article