For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”இது மட்டும் நடந்துவிட்டால் 2026இல் பாஜக ஆட்சியமைப்பது உறுதி”..!! அண்ணாமலை அதிரடி..!!

If BJP crosses one crore members in Tamil Nadu alone, it is certain to form government in 2026.
07:20 AM Jan 20, 2025 IST | Chella
”இது மட்டும் நடந்துவிட்டால் 2026இல் பாஜக ஆட்சியமைப்பது உறுதி”     அண்ணாமலை அதிரடி
Advertisement

நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ”3 சட்டப்பேரவை தொகுதிகள் கொண்ட மாவட்டங்களில், நாமக்கல்லில் தான் அதிக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அனைத்து கட்சிகளும் நிரந்தர பொதுச்செயலாளர், மாவட்டத் தலைவர்களை பார்க்கிறோம். ஆனால், பாஜக தான் உண்மையான ஜனநாயக கட்சி.

Advertisement

ஏனென்றால், கிளைத் தலைவர்கள் தொடங்கி 3 மாதங்களில் அடுத்தடுத்து உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. 33 மாவட்டங்களுக்கான தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பாஜகவின் முதல் உறுப்பினர்கள் சேர்க்கை பாகம் தொடங்குகிறது. தேசியத் தலைவரை தேர்வு செய்வதற்கு முன்பாக ஒரு பாகமும், அதன்பின் இரண்டாம் பாகமும் நடைபெறும். முதல் உறுப்பினர் சேர்க்கை முகாம் முடிவில் தமிழக பாஜகவின் உறுப்பினர் எண்ணிக்கை 48 லட்சமாக உள்ளது.

நம்முடைய இலக்கு ஒரு கோடி என்பதை எட்ட முடியும். அதேபோல் பதிவு செய்யப்படாதவர்கள் 4 லட்சம் பேர் இருக்கின்றனர். பாஜகவுக்காக முழு நேரம் பணியாற்ற தயாராகிறேன் என கூறும் தீவிர உறுப்பினர்கள் 55,000 பேர் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் பாஜக, ஒரு கோடி உறுப்பினர்கள் என்ற எண்ணிக்கையை தாண்டிவிட்டால், 2026ல் ஆட்சியமைப்பது உறுதி என்று தெரிவித்துள்ளார்.

Read More : திறனாய்வு தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களுக்கான இன்று ஹால் டிக்கெட் வெளியீடு…!

Tags :
Advertisement