தடையில்லையேல்!... உடனே உங்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிடுங்கள்!… தமிழக அமைச்சரை அலறவிட்ட நிர்மலா சீதாராமன்!
காஞ்சிபுரத்தில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நேரடி நிகழ்ச்சிகளை திறந்த வெளி மைதானத்தில் ஒளிபரப்ப போலீசார் தடை விதித்துள்ளதாக பா.ஜ., பிரமுகர்கள் கூறியுள்ளனர். இது போன்ற தடைகளை போடும் மாநில அரசுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அயோத்தி கும்பாபிஷேக விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் நேரடி ஒளிபரப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எஸ்.எம்.ஜி. சூர்யா மஹால் அருகில் நிகழ்ச்சிகள் காலை 8 மணி முதல் துவங்கி நடக்கும் என காஞ்சி மாநகர ஆன்மிக பேரவை அறிவித்துள்ளது. ஆனால் திறந்த வெளியில் லைவ் நிகழ்ச்சி நடத்தக்கூடாது என போலீசார் பா.ஜ., மாவட்ட நிர்வாகிகளிடம் எச்சரித்துள்ளனர். மேலும் ஏற்பாடு கூடாரங்கள் போலீசார் உத்தரவால் புல்டோசர் மூலம் அகற்றப்பட்டது.
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரது எக்ஸ் வலைதளத்தில், " அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பைக் காண தமிழக அரசு தடைவிதித்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், ராமர் பெயரில் பூஜை, பஜனை, பிரசாதம், அன்னதானம் வழங்க அனுமதி இல்லை. போலீசார் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ளனர். அரசின், ஹிந்து விரோத போக்கை கடுமையாக அரசின், ஹிந்து விரோத போக்கை கடுமையாக கண்டிக்கிறேன்என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்து ஹிந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபு தனது எக்ஸ் தளத்தில், சேலத்தில் எழுச்சியோடு நடைபெற்று வரும், திமுக இளைஞரணி மாநாட்டை திசை திருப்புவதற்காக திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் ராமர் பெயரில் பூஜை செய்யவோ, அன்னதானம் வழங்கவோ, பிரசாதம் வழங்கவோ பக்தர்களுக்கு எந்தத் தடையையும் அறநிலையத்துறை விதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, உள்நோக்கம் கொண்ட பொய்ச் செய்தியை, உயர்ந்த பதவியில் உள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் பரப்புவது வருத்தத்துக்குரியது என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து மீண்டும் நிர்மலா சீதாராமன் தனது எக்ஸ் தளத்தில், தரவுடன் ஆதாரத்துடன் மக்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். ஹிந்துக்களின் வழிபாட்டு முறையில் மாற்றி மாற்றி இடையூறுகளை ஏற்படுத்துவதை தமிழகம் முழுவதில் இருந்தும் வரும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது உங்களுடைய கடமை. தடையில்லையேல், உங்கள் அதிகாரிகளை, உடனே தடங்கல் செய்வதை நிறுத்தி, பக்தர்களுக்கு ஒத்துழைக்குமாறு உத்தரவிடுங்கள் என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.