மனைவி தவறான உறவு வைத்திருந்தால் கணவர் விவாகரத்து பெறலாம்!… நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
Court: ஒரு பெண் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்டால் , அது கணவனுக்கு மனரீதியான கொடுமைக்கு சமம் என்பதால் வழக்கு ஒன்றில் கணவனுக்கு விவாகரத்து வழங்கி சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், ராய்கர் மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவியின் தகாத உறவையடுத்து, விவாகரத்து கேட்டு ராய்கர் கீழமை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கீழமை நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில், மனைவியின் நடத்தையில் திடீரென மாற்றம் ஏற்பட்டதாகவும், அற்ப விஷயங்களில் அடிக்கடி தகராறு ஏற்படுவதாகவும் கணவர் கூறினார்.
மே 27, 2014 அன்று, தனது மனைவி, வீட்டை விட்டு வெளியேறி அதேபகுதியில் உள்ள வேறொரு நபரின் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது மனைவியும், அந்த நபரும் தனிமையில் இருந்ததாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த மனைவி, தனது கணவர் தவறாக நடந்து கொண்டதாகவும், குழந்தைகளை சந்திக்க விடாமல் தடுத்ததாகவும் குற்றம் சாட்டினார். விவாகரத்து விண்ணப்பம் தவறான காரணங்களை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் கூறினார்.
இருதரப்பினரின் சாட்சியங்களையும் ஆராய்ந்த பிறகு இருவரும் 2017 முதல் பிரிந்து வாழ்கின்றனர் என்று டிவிஷன் பெஞ்ச் குறிப்பிட்டது. கணவரின் கூற்றுகளை ஆதரித்து, கணவர் இல்லாத நேரத்தில் ஒரு ஆண் நண்பர் தனது வீட்டிற்குச் சென்றதாக குறுக்கு விசாரணையின் போது மனைவி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, இந்த ஜோடி ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக தனித்தனியாக வாழ்ந்து வருவதால், திருமண முறிவு திரும்பப் பெற முடியாதது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள்காட்டி, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், நீண்ட காலப் பிரிவினை மனக் கொடுமைக்கு இட்டுச் செல்லும் என்றும், திருமண உறவுகளைத் துண்டிக்க வேண்டியதிருக்கும் என்றும் இது இந்து திருமணச் சட்டத்தின் 13(1) (i-a) ஆவது பிரிவின் கீழ் திருமணத்தை ரத்து செய்ய வழிவகை செய்கிறது என்று கூறி இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது.
Readmore: நேருக்கு நேர் சவாலானது!… இன்று இந்தியா – பாகிஸ்தான் மோதல்!… ரோகித் ஷர்மா பேச்சு!