பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் இறந்தால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை..!! மசோதா நிறைவேற்றம்..!!
மேற்குவங்கத்தில் உயிரிழப்புக்கு வழிவகுக்கும் பாலியல் வன்கொடுமையை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் செயல்படும் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் மருத்துவர் கருத்தரங்கு அறையில் கடந்த 9ஆம் தேதி கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கக் கோரியும் கடந்த 21 நாட்களாக மருத்துவர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மேற்குவங்கத்தில் உயிரிழப்புக்கு வழிவகுக்கும் பாலியல் வன்கொடுமையை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு அபராஜிதா என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சட்டம் பாலியல் வன்கொடுமை வழக்குகளில், முதற்கட்ட விசாரணை அறிக்கை தயாரானதில் இருந்து 21 நாட்களில் முழு விசாரணையை முடிக்க வழிவகுக்கிறது.