'No Lipstick.. No Makeup' மீறினால் கடும் அபராதம்!! காரணம் கேட்டா ஷாக் ஆவீங்க!! எந்த நாடு தெரியுமா?
ஆட்சியாளர் வகுக்கும் விதிகளை சிறிதும் யோசிக்காமல் மக்கள் பின்பற்ற வேண்டிய ஒரு நாடாக வடகொரியா இருந்து வருகிறது. இந்த 21ஆம் நூற்றாண்டில் மிகவும் அறியப்பட்ட ஒரு சர்வாதிகார ஆட்சியாளர் இருக்கிறார் என்றால் அவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன்.
இவர் தனது நாட்டு மக்கள் பின்பற்ற வேண்டிய ஃபேஷன் தொடர்பான பல விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்கி அதனை பின்பற்ற செய்து வருகிறார். ஃபேஷன் சார்ந்து Kim Jong-un வகுத்துள்ள விதிகளை அந்நாட்டு மக்கள் பின்பற்றவில்லை என்றால், கடுமையான தண்டனையை சந்திக்க நேரிடும். அந்நாட்டில் உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் பல மேக்கப் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
அதிலும் பெண்களுக்கு மிகவும் விருப்பமான ரெட் கலர் லிப்ஸ்டிக் பயன்படுத்த அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. வட கொரியாவில் வசிக்கும் பெரும்பாலான பெண்கள் தங்கள் உதடுகளில் லைட்டான கலரில் இருக்கும் லிப்ஸ்டிக் மட்டுமே தங்கள் உதடுகளில் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள், ஒருபோதும் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கிற்கு அனுமதி இல்லை.
சிவப்பு என்பது வறுமையின் நிறம், கம்யூனிசத்தின் நிறம் என்று சொல்லப்படுவதுண்டு. இன்னொரு பக்கம், இது அழகுசார்ந்து ஈர்க்கும் நிறமாகவும் உள்ளது. இந்நிலையில், வட கொரியாவில் சிவப்பு நிற லிப்ஸ்டிக்குக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிற உதட்டுச்சாயம் மீதான தடையின் பின்னணியில் உள்ள காரணம் என்ன தெரியுமா?
இந்த நாட்டின் ஆட்சியாளரான Kim Jong-un சிவப்பு நிறத்தை முதலாளித்துவம் மற்றும் தனித்துவத்துடன் தொடர்புடையதாக கருதுவது தான். அந்த வகையில் அந்நாட்டு அதிபர் சிவப்பு உதட்டுச்சாயத்தை முதலாளித்துவத்தின் அடையாளமாக கருதுகிறார். சிவப்பு நிறம் தன்னை விட பெரியவர் இல்லை என்ற உணர்வை குறிப்பதாக அவர் நம்புகிறார். இத்தகைய சூழ்நிலையில் கிம் ஜாங் உன் தனது நாட்டில் வசிக்கும் எந்த நபரும் ஆட்சியாளரை விட அதாவது தன்னை விட பெரியவராக இருக்க கூடாது என்று நினைத்து, ரெட் கலர் லிப்ஸ்டிக்கிற்கு தடை விதித்துள்ளார்.
தடை விதிக்கப்பட மேக்கப் செய்து கொள்ளும் பெண்களை பிடிக்க ரோந்து படையும் உள்ளன. விதிகளை மீறினால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்ற விதிமுறையும் உள்ளது. அதே போல வட கொரியாவில் எந்த பெண்ணும் தனது தலைமுடிக்கு சாயம் பூசவோ அல்லது கலரிங் செய்யவோ முடியாது, ஏனெனில் இதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்நாட்டில் பெண்கள் தலைமுடியை சரியாக நேர்த்தியாக கட்டியிருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக செயின்கள் அல்லது மோதிரங்கள் போன்ற அணிகலன்களையும் அந்நாட்டு மக்கள் அணிய முடியாது. வட கொரியாவில் தயாரிக்கப்பட்ட அழகுசாதனப் பொருட்களை மட்டுமே அந்நாட்டு மக்கள் பயன்படுத்த அனுமதி உண்டு, ஏனென்றால் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது.
Read more ; நீரிழிவு மற்றும் எடை இழப்புக்கு பயன்படுத்தப்படும் போலி மருந்துகள் குறித்து WHO எச்சரிக்கை..!!