For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’படம் நன்றாக இருந்தால் எல்லோரிடமும் கண்டிப்பாக சென்றடையும்’..!! வெற்றி மாறனின் சார் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு..!!

The trailer of Bose Venkat's 'Char' is out now.
03:08 PM Sep 18, 2024 IST | Chella
’படம் நன்றாக இருந்தால் எல்லோரிடமும் கண்டிப்பாக சென்றடையும்’     வெற்றி மாறனின் சார் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
Advertisement

தமிழ் சினிமா நடிகரான விமல் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் 'சார்'. இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தை போஸ் வெங்கட் இயக்கியுள்ளார். இவர், இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்த கன்னி மாடம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement

இதைத்தொடர்ந்து, போஸ் வெங்கட் இயக்கியுள்ள 'சார்' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் விமல் உடன் இணைந்து சரவணன், விஜய் முருகன், ஆடுகளம் ஜெயபாலன், நடிகை ரமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் சாயா கண்ணன் என்பவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், "இந்தப் படத்தில் நான் இணைந்திருப்பதால் படம் மக்களை சென்றடைந்துவிடும் என்று சொல்கிறார்கள். ஆனால், அப்படி எதுவும் கிடையாது. படம் நன்றாக இருந்தால் எல்லோரிடமும் கண்டிப்பாகச் சென்றடையும். எனக்கு ஏற்புடைய படத்தில் என்னுடைய பெயர் இடம்பெற்றிருப்பது மிகவும் சந்தோசம்” என்று தெரிவித்தார்.

Read More : ஆதாரத்துடன் சிக்கிய ஜெயம் ரவி..!! யார் இந்த கெனிஷா..? கோவா ட்ரிப்பில் நடந்தது என்ன..? ஆர்த்தியின் கோபத்திற்கு இதுதான் காரணமா..?

Tags :
Advertisement