For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”தல, தளபதி படம் வந்தால் தான் தியேட்டருக்கே தீபாவளி”..!! சிவகார்த்திகேயனை வெச்சி செய்த இயக்குனர் மோகன் ஜி..!!

Diwali for cinema only when Thala, Thalapathy came out. 'After this, that's all,' he said
03:03 PM Oct 30, 2024 IST | Chella
”தல  தளபதி படம் வந்தால் தான் தியேட்டருக்கே தீபாவளி”     சிவகார்த்திகேயனை வெச்சி செய்த இயக்குனர் மோகன் ஜி
Advertisement

கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான 'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இயக்குநர் மோகன் ஜி. அடுத்ததாக இவர் இயக்கிய திரைப்படம் திரெளபதி. இதில் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகானாக நடித்தார். போலி திருமணம், நாடகக் காதல் ஆகியவற்றை மையக்கருவாக கொண்டு வெளியான இப்படம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது.

Advertisement

இதனால் மோகன் ஜிக்கு ஜாதி வெறியன் என்ற முத்திரையையும் சிலர் குத்தினர். இவரது இயக்கத்தில் அண்மையில் வெளியான பகாசூரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”டிக்கெட் ப்ரஷ்ஷரே இல்ல… தல, தளபதி படம் வந்தாதான் திரையங்கிற்கு தீபாவளி. இதுக்கு அப்புறம் அதெல்லாம் அவ்வளவுதான் போல" என்று குறிப்பிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'அமரன்'. India's Most Fearless: True Stories of Modern Millitary புத்தகத்தில் இடம் பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் நடந்த 'அமரன்' புரோமோஷன் நிகழ்வில், இந்தக்கதைக்கு சிவகார்த்திகேயனை கதாநாயகனாக தேர்ந்தெடுத்தது ஏன் என்பதற்கான காரணத்தை ராஜ்குமார் பெரியசாமி பேசினார்.

அவர் பேசுகையில், "முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நான் யாரை வேண்டுமென்றாலும் நடிக்க வைத்திருக்கலாம். ஆனால், எனக்கு ஒரு சராசரி மனிதனின் முகம் தேவைப்பட்டது. அவர் ஒரு சராசரி மனிதனுக்கான அடையாளத்தை அவர் பிரதிபலித்ததால் சிவகார்த்திகேயனை தேர்ந்தெடுத்தேன். இன்னும் 10 ஆண்டுகள் கழித்து, இன்னும் பெரிய நட்சத்திர அந்தஸ்தில் சிவா இருந்தாலும் கூட, அவருக்கு அந்த சராசரி மனிதனுக்கான அடையாளம் இருக்கும்" என்று பேசினார்.

சிவகார்த்திகேயனின் சம்பளம் என்ன..?

அமரன் திரைப்படம் ரூ. 150 கோடி முதல் 200 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.20 கோடி வரை சம்பளம் பெறுவதாக தெரியவருகிறது. மேலும், பழைய கார்த்திக் நடித்த அமரன் படக்குழுவினரிடம், அனுமதி பெற்ற பின், இப்படத்தின் பெயர் பொதுவெளியில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read More : ஆண்மையை அதிகரிக்கும் காய்கறி..!! இளைஞர்களே இதை உணவில் அதிகம் சேர்த்துக்கோங்க..!! அந்த பிரச்சனையே வராது..!!

Tags :
Advertisement