கணவன் அல்லது மனைவி இறப்பது போல் கனவு கண்டால் என்ன அர்த்தம்? நல்லதை குறிக்குமா அல்லது கேட்டதை குறிக்குமா..!
கனவு என்பது மிகவும் முக்கியமானது. பலருக்கு இது நிஜ வாழ்க்கையுடன் தொடர்புடையதாக இருக்கும். கனவுகளில் நிறைய விஷயங்கள் வரும். சிலருக்கு கனவுகள் லாஜிக்கே இல்லாமல் வரும். கனவுகள் பல விதம் உள்ளது. கனவில் நல்லதும் வரும் கெட்டதும் வரும். கனவில் சொர்க்கத்தில் வசிப்பது போல் இருக்கும். நாம் நீண்ட நாட்களாக ஏங்கிக் கொண்டிருந்த விஷயம் நமக்கு கனவில் கிடைப்பது போல் இருக்கும்.
அப்படி வரும் கனவுகள் அனைத்திற்கும் ஒரு பலன்கள் இருக்கும். கனவுகள் என்பது நமக்கு நடக்கக்கூடிய விஷயங்களை முன் கூட்டியே தெரிவிக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஒரு சிலர் கெட்ட கனவுகள் வந்தால் அதை அந்தளவிற்கு பெரியதாக எடுத்து கொள்ளமாட்டார்கள். ஆனால் ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள் கண்ட கனவுக்கு என்ன பலனாக இருக்கும் என்று பயப்படுவார்கள்.
அந்த வகையில் இன்று கணவனுக்கு மனைவி இறப்பது போன்ற கனவும், மனைவிக்கு கணவன் இறப்பது போன்ற கனவும் வந்தால் என்ன பலன் என்று இங்கு பார்ப்போம். மனைவி இறப்பது போல கனவு கண்டால் இன்று வரை அவர்கள் வாழ்க்கையில் அனுபவித்து வந்த துன்பங்கள் அனைத்தும் நீங்கும். ஆயுள் விருத்தி உண்டாகும். கணவன் இறப்பது போல கனவு கண்டால் கணவரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஆயுள் விருத்தி உண்டாகும்.
உயிரோடு இருப்பவர்கள் இறந்து போவது போல் கனவு கண்டால் பயப்படவே தேவையில்லை. நமக்கு பிடித்தவர்கள் இறந்து போவது போல் கனவில் கண்டால் அந்த நபருடைய வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும் என்பது அர்த்தம். அவர்களுக்கு அனைத்து துன்பங்களும் நீங்கி மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை வாழ்வார்கள். கனவு காண்பவரே இறப்பது போல் கனவு கண்டால் அவர்கள் வாழ்வில் ஏதோ மாற்றம் ஏற்பட போகிறது என்று அர்த்தம். உங்கள் நண்பர்கள் இறப்பது போல் கனவில் வந்தால் நீங்கள் அவர்களை நேசிக்கிறீர்கள் என்று அர்த்தம். கணவன் அல்லது மனைவி இறப்பது போல் கனவு கண்டால் எதிர்பார்த்த குணங்களில் ஏதோ குறை உள்ளது என்று அர்த்தம்.