பிரிட்ஜில் வைத்தால் விஷமாக மாறும்..!! இனி இந்த 7 உணவுப் பொருட்களை வைக்காதீங்க..!!
இன்றைய காலகட்டத்தில் காய்கறிகளை பாதி பயன்படுத்திவிட்டு மீதியை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துகிறார்கள். இது மிகவும் ஆபத்தானது. அந்தவகையில், பிரிட்ஜில் வைத்தால் விஷமாக மாறும் 7 உணவுகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தக்காளி
தக்காளியில் லைகோபீன் உள்ளது. இதில் உள்ள கரோட்டினாய்டு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. தக்காளியை குளிரூட்டும்போது லைகோபீனின் கட்டமைப்பை மாற்றி, அது டோமடைன் கிளைகோல்கலாய்டு எனப்படும் கிளைகோல்கலாய்டாக மாறுகிறது. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
உருளைக்கிழங்கு
குளிர்ந்த வெப்பநிலையால், உருளைக்கிழங்கு மாவுச்சத்து சர்க்கரையாக மாறும். இது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். உருளைக்கிழங்கு முளைக்க தொடங்கிவிடும் என்பதால், வெளியே காற்றோற்றமாக, ஈரப்பதம் குறைவாக உள்ள இடத்தில் வைக்க வேண்டும்.
வெங்காயம்
வெங்காயத்தை பிரிட்ஜில் வைப்பதால், அங்குள்ள ஈரப்பதத்தை உறிஞ்சுகிறது. பிரிட்ஜில் உள்ள குளிர்ச்சியின் காரணமாக, வெங்காயத்தில் உள்ள நொதிகள் செயல்படுத்தப்படுகின்றன. இதனால், வெங்காயம் விரைவாக கெட்டுவிடும்.
வாழைப்பழங்கள்
வாழைப்பழங்களை பிரிட்ஜில் வைத்தால் அவற்றின் புத்துணர்ச்சியையும், சுவையையும் குறையுமாம். வாழைப்பழங்களை காற்றோட்டமாக வைத்திருந்தாலே அழுகாமல் இருக்கும். ஃபிரிட்ஜில் வைத்தால் 2 நாட்களுக்கு பிறகு அழுக தொடங்கிவிடும்.
பூண்டு
பூண்டை தோலுரித்து பிரிட்ஜில் சேமித்து பயன்படுத்துவது அதன் சுவையை குறைக்கும். பூண்டை சேமிக்க விரும்பினால், உரித்த பூண்டை காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கலாம். டப்பாவை உலர்ந்த மற்றும் காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதால், 2-3 நாட்களுக்கு பூண்டு நன்றாக இருக்கும்.
ரொட்டி
குளிர்சாதன பெட்டியில் ரொட்டியை வைத்தால் அதன் மொறுமொறுப்பு தன்மை மாறி நமத்து விடும். குளிர்சாதனப் பெட்டியில் ரொட்டியை வைப்பதால் பூஞ்சை உண்டாகி, விரைவில் கெட்டுவிடும்.
தேன்
பிரிட்ஜில் உள்ள குளிர்ச்சியின் காரணமாக, தேனில் உள்ள நீர் உறைந்து, அதன் தரம் மோசமாகும். தேனில் உள்ள நொதிகள் குளிரூட்டல் மூலம் செயல்படுத்தப்படுகிறது, இது தேனில் நொதித்தல் ஏற்படுத்தும். இதனால் சுவை, தரம் மாறிவிடும்.
Read More : நாய்கள் ஏன் இரவு நேரத்தில் மட்டும் அதிகம் குரைக்கிறது தெரியுமா..? இவ்வளவு விஷயம் இருக்கா..?