For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’இப்படியே போச்சுனா ஒருத்தரும் இருக்க மாட்டாங்க போல’..!! அதிமுகவில் இணைந்த மநீம மாநில செயலாளர்..!! அதிர்ச்சியில் கமல்..!!

01:25 PM Feb 16, 2024 IST | 1newsnationuser6
’இப்படியே போச்சுனா ஒருத்தரும் இருக்க மாட்டாங்க போல’     அதிமுகவில் இணைந்த மநீம மாநில செயலாளர்     அதிர்ச்சியில் கமல்
Advertisement

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி மாறுவது ஒரு பக்கமும், சீட் கிடைக்காத விரக்தியில் மாற்றுக்கட்சியில் முக்கிய நிர்வாகிகள் இணையும் சம்பவமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பல்வேறு மாநிலங்களில் பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சியில் இருந்து வேறு சில கட்சிக்கும் முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இணையும் செய்தி அவ்வப்போது வெளியாகி வருகிறது.

Advertisement

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் 14 பேர் தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜகவில் கட்சி பணியாற்றி வரும் நடிகை கவுதமி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

இதனையடுத்து, பாஜகவின் தென் மாநில சிறுபான்மை அணி பொறுப்பாளர் பாத்திமா அலியும் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இந்த பரபரப்பான நிலையில் நடிகர் கமல்ஹாசன் கட்சியின் சமூகவளைதளம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் கிருபாகரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். இதனால், கமல்ஹாசன் அதிர்ச்சியில் உள்ளார்.

Tags :
Advertisement