பாஜகவை எதிர்த்து நிற்க துணிவு இல்லையென்றால் ஏன் அதிமுகவுக்கு தலைமை ஏற்கிறார்..? எடப்பாடி மீது கடும் விமர்சனம்..!!
பிரதமர் மோடியும், அண்ணாமலையும் கச்சத்தீவு குறித்து பேசும்போது, அதில் அதிமுகவின் நிலைப்பாட்டையும் அம்மாவின் முயற்சி குறித்து சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் இந்த தயக்கம்? என கே.சி.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், எடப்பாடி பழனிசாமி ஏன் பாஜகவை கண்டு பதுங்குகிறார்? வலிமையோடு எதிர்த்து நிற்க துணிவு இல்லாமல் ஏன் அதிமுகவுக்கு தலைமை ஏற்கிறார்? ஜெயலலிதா அம்மா அவர்கள் கச்சத்தீவை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பிரதமர் மோடியும், அண்ணாமலையும் கச்சத்தீவு குறித்து பேசும்போது, அதில் அதிமுகவின் நிலைப்பாட்டையும் அம்மாவின் முயற்சி குறித்து சொல்வதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் இந்த தயக்கம்?
பாஜவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டு சென்றதற்கு ஜெயலலிதா அம்மாவின் கனவுகளை சிதைத்து பாவம் செய்கிறார்கள் என்கிறார் பிரதமர் மோடி. ஜெயலலிதா அம்மா தான் மோடியா? லேடியா? என்று பாஜகவையும், மோடியையும் எதிர்த்து களம் கண்டார். அந்த வழியில் நாங்கள் பயணிக்கிறோம் என்று மோடிக்கு பதில் சொல்ல பயப்படுவது ஏன்? "ஜாதிகள் இல்லையடி பாப்பா, குலம் தாழ்த்தி, உயர்த்தி சொல்லல் பாவம் பாப்பா!"
பிரதமர் பாரதியாரின் பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்று சொல்கிறார். ஆனால் பாரதியார் சொன்ன இந்த கருத்து அவருக்கு புரியவில்லையா? அல்லது தெரியவில்லையா? அண்ணாமலை நல்ல சாதிய பின்புலத்தில் இருந்து வந்திருக்கிறார் என்றால் மற்ற சாதிகளெல்லாம் நல்ல சாதிகள் இல்லையா? சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட இயக்கம் #அதிமுக அதன் சார்பாக கருத்து தெரிவிக்க ஏன் இபிஎஸ் தயங்குகிறார்?. அண்ணாமலைக்கு பணம் சம்பாதிக்க ஆசை இல்லை என்பதால் தான் பாஜகவில் இணைந்துள்ளார் என்கிறார் மோடி. ஆனால் ஒரு ஐபிஎஸ் அதிகாரி கட்சியில் இணைந்ததும் தலைவராக்கப்படும் அளவிற்கு #திராவிட கட்சிகளில் தலைமைக்கு பஞ்சம் ஏற்படவில்லை என்பதை உணர்த்த தவறிவிட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
Read More : Seeman | ’பாஜக என்னை பார்த்து பயப்படுகிறது’..!! சீமான் அனல் பறக்கும் பிரச்சாரம்..!!