”பேய்கள் இருப்பது உண்மையென்றால் இதையெல்லாம் ஏன் செய்யல”..? அறிவியல் என்ன சொல்கிறது..?
பேய் என்ற வார்த்தை தற்போது வரை விவாதத்திற்கான ஒரு சொல்லாகவே இருக்கிறது. சிலர் பேய்களை நம்புகின்றனர். சிலர் நம்புவதில்லை. சிலர் பேய்கள் நிஜம் என்றும், மற்றவர்கள் அவை வெறும் மனிதனின் கற்பனையே என்றும் கூறுகின்றனர். எதார்த்தம் எதுவாக இருந்தாலும், பேய்கள் இருக்கிறதோ இல்லையோ, அது நம் தனிப்பட்ட நம்பிக்கைகளைப் பொறுத்தது.
ஆனால், அறிவியல் அதைப் பற்றி என்ன சொல்கிறது என்பது தெரியுமா..? பேய்கள் நிஜமா என்பது குறித்து நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் தென் கரோலினா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் பேரி மார்கோவ்ஸ்கி இதற்கு மிக விரிவான பதில் அளித்துள்ளார். பேய்கள் இருப்பதாக பலர் நம்புவதாக அவர் கூறியுள்ளார். இந்த நம்பிக்கையின் பின்னணியில் அவர்களுக்கு நடந்த விசித்திரமான சம்பவங்கள், பறக்கும் புத்தகங்கள், விளக்குகள் தானாகவே எரிந்து அணைதல், ஒலிகள் போன்ற சத்தங்கள் போன்றவற்றால் பேய்கள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர்.
ஆனால், பேய்களின் இருப்பு சாத்தியமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்..? ஒருவேளை பேய்கள் மனிதர்களை போல நடந்துகொள்கின்றன என்றால், அவை ஏன் மனிதர்களைப் போல கழிப்பறைக்குச் செல்லக்கூடாது. பேய்கள் கழிப்பறைக்குச் சென்றன என்றோ, குளியலறையில் குளித்தன என்றோ மக்கள் ஒருபோதும் சொன்னதில்ல்லை. இயற்பியல் தொடர்பான பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு, பேய்கள் இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. மனிதன் இறந்த பிறகு அவர்களது எந்த பாகமும் அழியாமல் இருப்பதில்லை.
பேய்கள் பற்றி மக்கள் கொண்டிருக்கும் கருத்துக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களால் உருவாக்கப்பட்டவை. மொபைல் போன்களில் கேமராக்கள், ஒலிப்பதிவுகள் வந்ததில் இருந்து, மக்கள் சிறிய விசித்திரமான ஒலிகள் அல்லது காட்சிகளை கூட பதிவு செய்து அவற்றை பேய்களுடன் தொடர்புபடுத்த தொடங்கினர்.
மக்கள் சில பதிவுகளை கொண்டு அவற்றை பேய்களோடு தொடர்புபடுத்தும் பெரும்பாலான சம்பவங்கள் சூழ்நிலையின் தவறான மதிப்பீடு அல்லது சூழ்நிலையைப் பற்றிய தவறான புரிதல் காரணமாகும். பல நேரங்களில், மங்கலான விளக்குகள், மன எண்ணங்கள், பயம், குறைவான தூக்கம் ஆகியவற்றால் மக்கள் தங்கள் முன் ஏதோ விசித்திரமானதை கண்டதாக உணரலாம். பேய்கள் இல்லை, மனிதர்களின் மனம்தான் சில சூழ்நிலைகளால் அவனை பயமுறுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
Read More : சூப்பர் வேலை..!! மாதந்தோறும் லட்சத்தில் சம்பாதிக்கலாம்..!! விண்ணப்பிக்க நவ.8ஆம் தேதியே கடைசி..!!