”இபிஎஸ் இதை செய்தால் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்கிறேன்”..!! டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி..!!
கூட்டணி நலனுக்காக தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ள தயார் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் பேசுகையில், “சுயநலம், பதவி வெறி காரணமாக அதிமுகவை கபளீகரம் செய்து வைத்துள்ளனர். அதிமுக பெரும் பின்னடைவை சந்தித்த பின்னும் மெகா கூட்டணி என்று இபிஎஸ் சொல்லி வருகிறார். அவர் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் தேட வேண்டுமானால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது சரியாக இருக்கும்.
இல்லையென்றால், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி முடிவுரை எழுதி விடுவார். பெரும்பாலான அதிமுகவினர் பாஜக கூட்டணியைத்தான் விரும்புகின்றனர். மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற எடப்பாடி பழனிசாமியின் முடிவு தவறானது. ஓபிஎஸ் போன்றவர்களை கட்சியில் இருந்து நீக்கியதும் தவறு.
ஒருவேளை அதிமுக இடம்பெறும் கூட்டணியில் நான் இருந்தால், இபிஎஸ் பயப்படுவார் என்றால் நான் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்ளவும் தயார். என்னை சார்ந்தவர்களுக்கு மட்டும் தொகுதிகள் கிடைத்தால் போதும். தனித்து போட்டியிட்டு திமுகவின் வெற்றிக்கு மறைமுகமாக உதவி செய்யாமல் பாஜக கூட்டணிக்கு வாருங்கள் என்று அதிமுகவை அழைக்கிறேன்” என்று பேசினார்.
Read More : பாலியல் குற்றவாளிகள், கொலையாளிகளுக்கு மரண தண்டனை..!! டொனால்டு டிரம்ப் அதிரடி..!!